May 12, 2023

புதை படிவங்கள் வ

புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்கிறது பல நூற்ராண்டு உயிரினத்தின் கணக்ள் அமிலkகுப்பியின் வழி என்னை உற்றுப் பார்க்கின்றன அதன் சிறு வால் அசைய திரும்பி பார்க்க திடுக் யாருமற்ர வராந்தா எங்கோ தெருக்குழந்தைகள் விளையாடும் சப்தம் பேரமைதி நானும் இல்லை என்னை ஒரு கண்ணாடிக்குள் உணர்கிறேன் என் முன் யாரோ ஒருவர் வேடிகை பார்த்தபடி நகர்கிறார் - அஜயன் பாலா

April 19, 2023

.மா.அரங்கநாதன் படைப்புகள் : விமரசனம் -அஜயன்பாலா

மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் காட்டிலும் சிறுகதைகளில் அவர் சற்று பலம் கூடியவராகவும் கலையம்சம் கூடிவரப்பெற்றவராகவும் காணப்படுகிறார். ஒருவேளை சிறுகதைகள் மட்டுமே மொத்தமாக தனித்தொகுப்பாக கொண்டுவந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.என்றபோதும் ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளனின் தார தம்மியம் எத்தகையது என மதிப்பிட பிற்பாடு ஆய்வாளர்களுக்கு வசதியான வகையில் இப்படி ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்த நற்றிணை பதிப்பகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடிக்கும்போது என்னையே நான் உற்றுப் பார்ப்பதை போல உணர்கிறேன். என் மனக்கிணற்றில் யாரோ எட்டிப் பார்ப்பது போல, காரணம் சில சமயங்களில் அவரை என் தந்தையாக உணர்ந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த புதிதில் கிட்டதட்ட மூன்று நான்கு ஆண்டுகள் தினசரி ம.அரங்கநாதனை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அந்த ஞாபகங்களை பகிராமல் புத்தகம் குறித்து மட்டுமே விமர்சனம் எழுத என்னால் முடியவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பே அவர் இறந்தவுடன் அவருக்காக நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் எனக்கும் அவருக்குமான உறவு குறித்து எழுதியிருந்தாலும் இந்த கட்டுரையிலும் அந்த உணர்வு என்னை மீறி எழுத வைக்கிறது. . மாம்பலம் ரயில் நிலையம் அருகில் சாந்தி காம்ப்ளக்ஸ். இப்போது அது ஜெயச்சந்திரன் துணிக்கடையாக மாறியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூன்றாவது மாடியில்தான் முன்றில் புத்தக கடை இருந்தது. அக்காலங்களில் தினமும் என் பத்திரிக்கை வேலை முடிந்து மாலை அவர் முன்றில் புத்தகக் கடைக்கு வருவதும் உரையாடுவதும் வழக்கம். அவர் வீடும் என் அறையும் அப்போது பழவந்தாங்கலில் அடுத்தடுத்த தெருவிலிருந்த காரணத்தால் இரவு எட்டு எட்டரைக்குமேல் கடையடைத்து விட்டு மாம்பலம் ரயில் நிலையம் வந்து பழவந்தாங்கல் வரை ஒன்றாக ரயிலில் பயணிப்போம்.அப்போது அவர் தொடர்ந்து சிகரட் பிடிப்பார். சார்மினார் சிகரட். வயது வித்தியாசம் பாராமல் எனக்கும் ஒரு சிகரட்டை நீட்டுவார். நான் பல சமயங்களில் மறுத்துவிடுவேன். கடையில் விட்ட உரையாடல் ரயில் பயணத்திலும் தொடரும். உலக இலக்கியம், சினிமா, இலக்கிய அரசியல்கள் என அனைத்தும் பேசுவார். அவரது ஆங்கில இலக்கிய பரிச்சயம் மற்றும் பழைய ஹாலிவுட் சினிமாக்கள் குறித்த துல்லியமான அறிவு எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. மார்லன் பிராண்டோ, கிரேட்டா கார்போ, பிரெட் ஆஸ்டர், ஜிஞ்சர் ரோஜர்ஸ் என பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களைப் பற்றி தான் பார்த்த அனுபவங்களையும் சொல்லுவார். எரோல் பிளின், ஜேம்ஸ் டீன் ஆகியோர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். இந்த மொத்த தொகுப்பின் பல கதைகள் அந்த காலத்தில் அவர் எழுதியவை பஃறுளியாற்று மாந்தர்கள் நாவலும் கூட அக்காலத்தில் எழுதப்பட்டதே. நாவல் வெளியாகும் முன்பே எனக்கு ஒரு பிரதி தந்து அதை படித்து அபிப்ராயம் சொல்லுமாறு கொடுத்தார். நான் அப்போதுதான் கல்லூரி படிப்பு முடிந்து சென்னை வாழ்க்கைக்குள் நுழைந்த காலம். ஆனாலும் அவர் என்னையும் என் எழுத்தின் மீதான ஆர்வத்தையும் மதித்து அவர் ஒவ்வொரு கதை எழுதிய பின்னும் கையெழுத்து பிரதியிலும் அச்சு பிரதியிலுமாக கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்பார். எனக்கு அவருடைய கதைகளில் அப்போது சில விமர்சனங்கள் இருந்தன. முதலாவதாக அவருடைய கதைகளில் முத்துக்கறுப்பன் என்ற ஒரே பாத்திரமே திரும்ப திரும்ப வருவது எனக்கு பிடிக்கவில்லை. அதை அவரிடம் நேரிடையாகவே சொன்னேன். இதர கதைகளின் நம்பகத்தன்மை, வாசக ஈர்ப்பு போய் முத்துக்கறுப்பன் எப்போது வருவான் என்ற எதிர்பார்ப்பும் அந்த பாத்திரத்தின் மீதான ஈர்ப்புமாக மட்டுமே கதை முடிந்து போய்விடுகிறது என்றும் கதையின் உள்ளடக்கத்தை அது பெரிதும் பாதிக்கிறது என்றும் சொல்வேன். அந்த வயதில் அவர் எனக்கு முழு சுதந்திரத்தையும் தந்தார் . ஆனால் மொத்தமாக படிக்கும் போது என் அக்கால அபிப்ராயம் தவறு என்றே எண்ணத்தோன்றுகிறது. இப்போது மொத்த கதைகளையும் வாசித்தபின் முத்துக்கறுப்பன் என்கிற பாத்திரம் நம் மனதில் ஒரு நிழலுருவமாக அழுத்தமாக பதிவதை உணர முடிகிறது. கதைகளில் எங்கும் முத்துக்கறுப்பன் தோற்றம் குறித்து விவரணைகளில்லை. ஒரு கதையில் திருமணம் செய்யப்போகும் இளைஞனாகவும் இன்னொரு கதையில் கிழவனாகவும் மற்ற கதையில் நடுத்தர வயதுடையவராகவும் வருகிறாரே தவிர்த்து எங்கேயும் விவரணைகளில்லை. மாறாக ஒரு குணச்சித்திரம் நமக்குள் அருவமாக பதிகிறது. கதைக்குள் அந்த அருவத்தின் நிழல் உண்டாக்கும் சலனங்கள்தான் அவருடைய ஒட்டுமொத்த கதைகளின் புதிர்த்தன்மைக்கு ஆதாரம். தமிழ் நவீன இலக்கிய சூழலில் மிகவும் தனித்தன்மை மிகுந்த கதையுலகம் ம.அரங்கநாதனுடையது. அவருடைய கதைகள் எளிமையானவை. மொழி இலகுவானது. வாசகனோடு நேரடியாக உரையாடக்கூடிய தன்மை கொண்ட கதைகள் . என்றபோதும் அவருடைய கதைகள் எளிதில் வசப்படாத அருவத்தன்மையும் கொண்டவை. வழக்கமான வடிவ பரிசோதனைக்கதைகள் மட்டுமே இத்தகைய அரூப உள்ளடக்கத்தை கைக்கொண்டிருக்கும். ஆனால் ம.அரங்கநாதன் கதைகள் தெளிவான எளிமையான 60,70 களின் பாணியில் கதையை சொல்லி அருவமான அல்லது நம்மை மிகவும் யோசனையில் ஆழ்த்தக்கூடிய முடிவைக் கொண்டிருப்பவை. பெரும்பாலும் அவர் எந்த கதையையும் நேரடியாக சொல்பவரில்லை, கதையை குறிப்பால் உணர்த்துகிறார். எது கதை என்பதை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு தெளிவற்ற நிலைக்குள் தள்ளப்படுவீர்கள் அதுதான் அவர் பயன்படுத்தும் உத்தி. தன்னுடைய சிறுகதைகளில் வாசகன் கதையை இதுதான் என கண்டுவிடக்கூடாது என்பதில் முழு கவனத்துடன் அவர் ஈடுபடுவதுதான் அவருடைய தனித்தன்மை. பொதுவாகவே சிறுகதைகளின் வடிவம் என்பது அதன் இறுதிவரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இறுதியில் சொல்லி சொல்லாமல் நிறுத்துவது எழுத்தில் ஒரு சாகசம். சில பண்பட்ட எழுத்தாளர்களுக்கே அது சாத்தியப்படும். ஒரு வெற்றிடத்தை முடிவில் விட்டுச்செல்லும் கதைகள் நம் மனதில் ஆழத்தேங்கி விடுகின்றன. கதை அதுகாறும் எதைச்சொல்ல வருகிறதோ அதை இறுதியில் ஒன்றுமில்லமால் செய்வது அல்லது அதை கடந்து வேறொன்றைச்சொல்லி நம்மை யோசிக்க வைப்பது அல்லது அதை குறிப்பால் உணர்த்தி வாசகனுக்குள் புதிர்த்தன்மையை உருவாக்குவது அல்லது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சிக்குள் வாசகனை ஆழ்த்துவது போன்ற முடிவுகளை தமிழின் பெரும்பாலான நல்ல கதைகள் கைக்கொண்டு வருகின்றன. இதை சரியாக செய்பவை மட்டுமே சிறந்த கதைகள். முடிவை திறமையாக கையாள்வதில் ஓ ஹென்றி, காப்கா, சதாத ஹசன் மாண்டோ மூவருமே அதி மேதைகள். இதனாலயே சிறுகதை உலகின் முடிசூடா மன்னர்கள் என்ற பெயரையும் வரித்துக்கொண்டவர்கள். ஓ ஹென்றியின் கிப்ட் ஆப் மேகி, லாஸ்ட் லீஃப் மற்றும் க்ரீன் ரூம் போன்ற கதைகளும் காப்கா வின் பாதர் உள்ளிட்ட கதைகளும் மாண்டோவின் ஒட்டு மொத்த கதைகளையுமே சொல்ல முடியும் மூன்றும் வெவ்வேறு பாணியிலானவை. தமிழில் இவர்களைப் போல முடிவில் செறிவான தொழில் நுட்பத்தை கைக்கொள்ளும் சிறுகதை எழுத்தாளர் என்றால் அசோகமித்ரனை சொல்லமுடியும். வெறும் கதையாக இல்லாமல் செய் நேர்த்தியாக செதுக்கி வாசகனை ஓரிடத்தில் நிற்கச்செய்து விட்டு காணாமல் போகக்கூடிய எழுத்து அவருடைய பாணி. அசோகமித்ரனுக்குப் பிறகு அந்த லாவகம் முழுமையாக கைகூடப்பட்ட எழுத்து ம.அரங்கநாதனுடையது. தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தன், கு.பா.ரா, மௌனி ஆகியோருக்குப் பின் ஆதவன், வண்ணநிலவன் வண்ணதாசன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் ஆகியோரிடம் சிறந்த நுணுக்கமான விவரணைகள், உள்ளுணர்வுகள், காட்சி பதிவுகள் அழுத்தமான பாத்திரங்கள், தனித்த வாழ்வனுபவங்கள் ஆகியவை சிறப்பாக கொண்டிருந்தாலும் சிறுகதையின் இறுதியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி மீண்டும் கதையை முதலிலிருந்து வாசிக்க தூண்டும் வடிவம் ம.அரங்கநாதனுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடைய புகழ்பெற்ற கதையான சித்தியை எடுத்துக்கொள்வோம். எதேச்சையாக ஒரு மைதானத்தில் ஓட்ட பயிற்சிக்கு வருகிறான் ஒரு இளைஞன். அங்கு காவலர் மூலமாக பெரியவர் ஒருவர் அறிமுகமாகிறார். அவர் முன்னாள் விளையாட்டு வீரர். நாடே அறிந்தவர் விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.தேசத்தின்மேல் மிகுந்த பற்று வேறு. அவருக்கு இவனை கண்டதும் பிடித்துப்போகிறது. அவர் அவனுக்கு பல உத்திகள் பல பயிற்சிகள் கற்றுக்கொடுத்து மிகப்பெரிய வீரனாக உருவாக்குகிறார். அவனும் பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறான். நாடே அவனை திரும்பி பார்க்கிறது. கடைசியில் ஒலிம்பிக் போட்டியில் அவன் பெயர் அறிவிக்கபோவதற்கு முந்தின நாள் பத்திரிக்கையாளர்கள் அவனை சுற்றி பேட்டி எடுக்கின்றனர். அவர்கள் அவன் இந்த இடத்தை அடைய அவன் பட்ட சிரமங்களைப் பற்றி சுவாரசியமான பதில்கள் அல்லது நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் வரும் என எதிர்பார்க்க, அவனோ எனக்கு எதுவும் தெரியாது ஓடத்தெரியும் ஓடினேன்… ஓடிக்கொண்டிருந்தேன் என்ற தினியிலேயே பதில் சொல்கிறான். இறுதியாக ஒலிம்பிக்கில் நம் தேசத்தின் எதிர்காலம் எப்படி என்பதுபோல் கேட்க பதிலுக்கு அவனோ எனக்கு தெரியாது என்னால் சொல்ல முடியாது எனக்கு ஓடமட்டுமே தெரியும் என்பது போல சொல்ல அதுவரை உற்சாகத்துடன் அருகில் நின்ற பெரியவர் கோபத்துடன் கதவை அடைத்துவிட்டு காரில் ஏறி செல்கிறார். அதோடு கதையும் முடிகிறது. யோசித்து பாருங்கள்... இந்த கதையில் யார் நாயகன். அந்த இளைஞனா பெரியவரா... கதை இளைஞனுடையதாக இருந்தாலும் கதையை முடிப்பது பெரியவரின் செயலே… இந்த கதை மூலம் அவர் சொல்ல வருவது என்ன ? இது வாசகனுக்கு விடும் சவால். வெறுமனே இந்த கதையை பரிசோதனை முயற்சி என சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. கதையின் இறுதியில் அந்த முதியவர் பாத்திரம் எதனால் அப்படி கோபப்பட வேண்டும் என்பதை யோசிக்கும் வழியில் உங்களுக்கான கதையின் இறுதி முடிச்சு உள் முகமாக சுருட்டப்பட்டு மறைந்து கிடக்கிறது. காப்காவின் ஜட்ஜ்மண்ட் கதையின் இறுதிபோல ரஷ்யாவில் வசிக்கும் நண்பனுக்கு தன் காதல் திருமண நிச்சயத்தை கடிதம் மூலமாக தெரிவிக்க போகும் முன் அப்பாவோடு உரையாடுகிறான். அப்பா அவனுக்கு தகவல் சொல்லக்கூடாது என்கிறார். இறுதியில் அவன் ஒரு பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான் இறுதியில் அவன் தற்கொலை போலத்தான் சித்தி கதையில் முதியவர் கோபத்துடன் காரில் ஏறிச்செல்வதும் கதை அங்கு முடியவில்லை. ஆனால் இரண்டிலும் இறுதி சம்பவம் உண்டாக்கும் அதிர்ச்சி கதையை மீண்டும் வாசிக்க கோருகிறது. காப்கா கதையில் அப்பாவும் மகனும் எந்த இடத்தில் முரண்படுகிறார்கள் என வார்த்தையில் தேடினால் கிடைக்காது. அது போலத்தான் சித்தி கதையிலும் இளைஞனுக்கும் முதியவருக்குமான முரணுக்கு என்ன காரணம் என யோசிக்க வைக்கிறார். சித்தி கதையில் இரண்டு பார்வை கோணங்கள் ஒளிந்திருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால், அந்த இளைஞன் தன் காரியத்தை கடமையை சரியாக செய்தாலே பலன் அதுவாக கிட்டும் என நினைப்பவன். அவனிடம் முஸ்தீபுகள் இல்லை, பெரிய இலட்சியங்கள் இல்லை… பார்ஸ்ட் கம்ப் பட நாயகனை போல ஓடிக்கொண்டேயிருக்கிறான், வெற்றி அவன் பின்னால் இயல்பாக வருகிறது. வாழ்வின் முழு பக்கத்தையும் அறிந்த ஒருவனுக்கு மட்டுமே இத்தகைய ஞானம் சாத்தியம். கடைசியில் அவன் பேட்டியில் பேசும்போது பெரியவர் இத்தனைக்கும் காரணமான தன்னை அவன் குறிப்பிடவில்லையே என கோபித்துக்கொண்டு போவதாக எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் அவன் சுயநலம் கொண்டவனாக, பெரியவரால் தனக்கு உயர்வில்லை தன் உழைப்பு மட்டுமே தன் வெற்றிக்கு காரணம் என சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இது எல்லாமே நம்முடைய தேர்வு… வழக்கமாக வரும் முத்துக்கறுப்பன் இல்லாமல் இக்கதை எழுதியதும் இந்த இரட்டை தன்மைக்கு காரணம். ஒருவேளை முத்துகறுப்பன் பேர் யாருக்கு வருகிறதோ அவன் பக்கம் நியாயமாக இருக்கும். காரணம் அவர் பெரும்பாலான படைப்பாளிகளைப் போல தன்னிலையை உயர்வாக எண்ணி எழுதக்கூடியவர். பெரும்பாலும் உறவுச்சிக்கல்களை அல்லது தனிமனித ஆன்ம அனுபவங்களை சார்ந்திருக்கும் இவரது கதைகளில் கோஷங்களோ பிரச்சாரங்களோ சமூக அவலங்களோ காணப்படுவதில்லை. சொல்லப்போனால் கதைகளில் பெரிய சிக்கல்களையும் அவர் சொல்வதில் பல கதைகள் துண்டு துண்டான சம்பவங்கள் அதை நாம்தான் கோர்த்து புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே அதை அப்படியே கடந்து செல்ல முடியாது. இரண்டாவது முறை கதையை மீண்டும் படிக்க வேண்டும் உதாரணத்துக்கு காடன் மலை எனும் கதை .. அதில் வரும் முத்துகறுப்பன் போளுர் வரை வந்து காணாமல் போகிறான். மலை திருவண்ணாமலை தான் என்பதை யூகித்து அறியமுடியும் அல்லது பரவத மலையாகவும் இருக்கலாம். திருவண்ணாமலை என ஏன் நான் சொல்கிறேன் என்றால் ம.அரங்கநாதன் அடிக்கடி ரமணர் பற்றி சொல்வார். திண்டிவனம் வரை வந்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார் என புதிர்த்தன்மையோடு கதைகளில் சொல்வது போல விவரிப்பார் ... காணாமல் போவது, தோன்றுவது, தோன்றி மறைவது போன்றவை அவர் கதைகளில் பல இடங்களில் காணக்கிடப்பவை.தென்னகம் என்றாலே அனைவரும் தெற்கு திசை தென் திசை என்றுதானே நாம் நினைத்திருப்போம் ஆனால் அவர் ஒரு கதையில் தென் என்றால் தென்படுதல் தோன்றி மறைதல்,அவன் தோன்றி மறைந்த இடம், காட்சியளித்த இடம் அதனால் தென்னகம் என புது விளக்கம் தருகிறார். இந்த மொத்த தொகுப்பில் என்னை மேற்சொன்ன இரு கதைகள் தவிர்த்து சிறிய புஷ்பத்தின் நாணம், வீடுபேறு பனை, (இதிலும் முத்துகறுப்பன் இல்லை)அஞ்சலி, போன்ற கதைகள் வடிவரீதியாகவும் உள்ளடக்கரீதியகாவும் என்னை பெரிதும் ஈர்த்தன. குறிப்பாக அஞ்சலி எனும் கதையில் இரண்டு கட்டுரைகள் மட்டுமே. அவை ஒரு விமர்சன எழுத்தாளன் இறப்பதற்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டுரைகள். இரண்டிற்குமான வித்தியாசம்தான் கதை. நல்ல வேளை நான் எழுதிய இரண்டு கட்டுரைகளும் அவர் இறப்பிற்கு பின்தான்… முன்பாக எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன் .. என்ன செய்ய முத்துகறுப்பன் என்னை எழுத அனுமதிக்கவில்லை. நன்றி.. ந்ற்றிணை காலண்டிதழ் 2018

April 5, 2023

ஜம்ப் கட்டில் ஒரு செல்லுலாய்ட் புரட்சி - ழான் லூக் கொதார்த் -அஜயன்பாலா

அஞ்சலி : உலக சினிமா இயக்குனர் ழான் லூக் கொதார்த்
நேற்று உலக சினிமாவே அதிர்ந்தது . தம் படைப்புகாளால உலகையே அதிரவைத்த பிரெஞ்சு சினிமா மேதையும்.. ஜம்ப் கட் எனும் படத்தொகுப்பு உத்தியை பயன் படுத்தி காட்சி மொழியில் கலகத்தை உண்டு பண்ணியவருமான ழான் லுக் கொத்தார்ததின் மறைவு செய்தி கொடுத்த தாக்கம் தான் அது.. பிரான்சுக்கும் சுவிட்சர்லாந்துக்குமிடையில் ஜெனிவா ஏரியின் மீதிருக்கும் ரோலி நகரில் தன் 91ம் வயதில் அமைதியாக இந்த உலக வாழ்வை தானே முறித்துக்கொண்டார் . ஆமாம் அவர் மரணம் அவரே எடுத்துக்கொண்ட முடிவு உடனே பலரும் இது தற்கொலையா என யோசிக்க்லாம் .. இல்லை அவர் அப்படிப்பட்ட , கோழையும் அல்ல இறக்கும் கடைசி நொடிவரை எந்த நோயும், அவரை நெருங்கவில்லை. . ஆனால் இயற்கை கடைசியில் அவரே மரணத்தை தேர்வு செய்து கொள்ளும் உரிமையை கொடுத்து ஆச்சரயப் படுத்தியுள்ளது. . . இந்த வாழ்க்கை போதும் என 91 வயதில் முடிவெடுத்த பின் அவர் சுவிஸ் அரசாங்கத்திடம் சொல்லி மருத்துவர் மூலம் தன் மரணத்தை தானே தீர்மானித்துக் க்கொண்டார் இப்படியான் அமைதியான் மரணக்களுக்கு . சுவிஸ் அரசாங்கம் தன் சட்ட தட்டங்களில் வழி வகை செய்திருப்பது ஆச்காரய்மான் ஒன்று . . உண்மையில் அவர் மரணம் கூட அவர் படங்கள் போல ஒரு அதீத புனைவுதான். உலகில் எத்த்னையோ மேதைகள் வாழ்ந்து மறைந்தாலும் இயற்கை வேறு யாருக்கும் கொடுகாத பரிசு இது . கொதார்த் ? சினிமாவில் அப்படி என்ன சாதனைகள் செய்தார் என சொல்ல வேண்டுமானால் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட சில சிஷ்யர்களைச் சொன்னால் ; அவர் பெருமையை நிங்களே பரிந்து கொள்ளலாம் இன்று உலக சினிமாவின் உன்னத இயக்குனர்களாக போற்றப்படும் குவாண்டின் டோராண்டினோ, மார்டின் ஸ்கார்சிஸ், அலேக்ஜாண்டிரோ இனாரிட்டு மற்றும் நம்ம ஊர் அனுராக் காஷ்யப் ஆகியோர தன் அவரை மானசீக குருவாக வரித்துக்கொண்ட ஏகலைவன்கள் . . சுருக்கமாக சொலலப் போனால் கொதார்த் உலக இயக்குனர்களின் டான் என சொல்ல்லாம் காட்சி மொழிக்குள் கவிதையும் அரசியலும் ஒன்றிணைத்து சினிமாவை சமுக உற்பத்தியாக மாற்றிய மிகப்பெரிய வித்தகர் தான் கொதார்த் .... அறுபது வருடங்களுக்கு முன் இவர் தன் சினிமாக்களில் ஆரம்பித்த குறியீடு .. நான் லீனியர் போன்ற அம்சங்ள் தான் இன்று நம் கோலிவுட் வரை வந்து சேந்துள்ளன . அவர் சினிமாக்களில் கொண்டு வந்த உத்திகள் பார்வையாளனி அதிர வைத்த அதீகாமயம் அவனை ஆர்வத்துடன் பார்க்கவும் சிந்திக்கவும் வைத்தன. படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே சட்டென தி என்த என்ற கார்ட் அடிக்கடி வந்து போய் அதிர்ச்சியஊட்டும். அது மட்டும் அல்லாமல் காடென கொதர்த்தி சினிமாவில் தோன்றி அடுத்த் காட்சி எப்படி எடுக்கலாம் என யோசிப்பது வரும். அல்லது எடிட்டிந்ஹ டேபிளில் எடிட்டருற்றன் அவர் சண்டை ப போடும் காட்சி வரும். படம் பார்ப்பவனை விழுப்பு நிலையில் வைத்திருக்க அவர் இந்த உத்திகளை பயன் படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார் கொதார்த்த என்பர் தனி நபர் அல்ல . அவர்கள் ஒரு இயக்கும் அந்த இயக்கத்தின் பெயர் நியுவேவ் . அந்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் அவரைத்த்விர நான்கு பேர். அவர்கள். பிரான்சுவா த்ரூபோ, . எரிக் ரோமர் கிளாத் ஷப்ரோல் ழாக் ரெவெட் ஆகியோர் அனைவருமே அரை குறை படிப்புடன் குட்டிச சு வரில் அமர்ந்து சைட் அடிக்கும் பருவத்தினர் . அவர்கள் வயதில் அன்று பலரும் பிரான்சில் அப்படித்தான் வாழ்க்கையை கழித்து வந்தனர் . ஆனால் எழுத்தாளராகும் இயக்குனராகும் கனவுகளுடன் இவர்களோ கலைப் பைத்தியங்களாக திரைப்பட சங்கங்கள் உலக சினிமாக்கள் . இலக்கியங்கள் என திரிந்தனர் . விளைவு ..... நியூ வேவ் எனும் சினிமா புரட்சி . கொதார்த் இந்த நண்பர்களுடன் உலக சினிமாவில் செய்த புரட்சி தான் இன்றும் அவர் புகழுக்கு கார்ணம் அப்படி அவர்கள் செய்த புரட்சிஉயின் கதையை சுருக்கமக பர்ப்பொம் ஓவியங்களின் வரலாறு படித்த்ரக்ளுக்கு டாடயிஸ்டுகள் என்ற கலகக் கும்பல் பற்றித தெரியும் . இந்த டாடயிஸ்ட் கும்பல் பிரான்சில் நடக்கும் ஓவிய காட்சிகளுக்கு நுழைந்து காட்சிக்கு வைக்கப்பட்ட ஒவியங்க்களை அடித்து உடைத்து கலர் பெயிண்டுகள் ஊற்றி கலவரம் செய்தார்கள் .. காரணம் அந்த ஓவியங்கள் சரியில்லை அதில் கலை இல்லை . அவைகளில் அரசியல் இல்லை என விமரசனம் செய்தனர் . அதன்பிறகுதான் ஐரொப்பாவில் நவீன ஒவ்யங்கள் கவனம் பெறத்துவங்கின . அது போல சினிமாவில் கலகம் செய்து அந்த கலையில் களையெடுக்க இந்த ஐவரும் விரும்பினர். . அதன் மூலம் உலக சினிமாவின் போக்கைத திசை திருப்ப முடிவெடுத்த்னர். . . ஆந்த்ரே பச்ன் என்பவர் குருவாக இருந்து இவர்களை ஊக்கப்படுத்தினார் . தான் நடத்திய கையேது சினிமா எனும் பத்ரிக்கையில் இவர்களை விமரக்கன் கட்டுரைகள் எழுத வைத்தார் அவர்கள் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களையும் அவரகளது கலை படங்களையும், குப்பை என விமர்சித்து எழுதினர். சினிமா என்பது அதுவரை ஒரு நாவலை வரிசை மாறாமல அப்படியே படம் பிடித்து கதை சொல்லும் ஊடகமாக பயன்படுத்தப் பட்டு வந்தது . இது பார்வையாளனை அவன் உணர்ச்சிகளை ஏமாற்றும் பொலி வித்தை .இது . தியேட்டரில் இருட்டறையில் நல்ல சினிமா என்ற பெயரில் பார்வையாலனுக்கு நடத்தப்படும் மூளைச் சலவை ..மாறாக சினிமா என்பது காட்சி அனுபவம் .அதன் வழியாக பார்வையாளனை சிந்திக்க வைப்பதுதான் உண்மையான் கலை என கூறினர். செட்டுகள் ஆடமபர அலங்காரங்கள் எதுவும் சினிமாவுக்கு தேவையில்லை நடிகர்களின் முகங்களை வடவும் சினிமாவுக்கு காமிரா கோணங்களும் படத்தொகுப்புமெ முக்கியம் .. வெறுமனே ஒரு இளம்பெண்ணையும் துப்பாக்கியையுமே வைத்துக்கொண்டு நல்ல சினிமா அனுப்வத்தை தங்களால் உருவாக்க முடியும் என சவால் விடுத்தனர். இவர்களின் விமர்சனத்தால் கடுப்பாகிப் போன அனறைய இயக்குனர்கள் உனகெல்லாம் பேசத்தான் தெரியும் முடிந்தல படம் எடுத்துக் காண்பி ..அபோது தெரியும் உன் யோக்கியதை என இவர்களை நோக்கி சவால் விட்ட்னர். கொதார்த்தும் அவர்களது புதிய அலை நண்பர்களும் இந்த சவாலை ஏற்றனர். கையோடு அவர்கள் தங்களுக்கன திரைக்கதையும் எழுதினர். ஆனாலும் அவ்ர்ளுக்கு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டுமே அதுதன் பிரச்னை . ஆளுக்கொருபக்கம் பணத்தை திரட்டவும் தயாரிப்பாளரை தேடியும் அலைந்தனர் . கொதார்த் ஒரு அணைக்கட்டில் வேலைக்குப் போனார் . த்ரூபோ தன் பணக்கார காதலியை மணம் முடித்து மாமனாரை தயாரிப்பாளர் ஆக்க திட்டம் வகுத்தார். இப்படித்தான் த்ரூபோவின் முதல் படம் 400 உதைகள் இந்த இயக்க்த்தின் முதல் படமாக 1959ல் கான் திரைப்ப்ட விழாவில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைப் பார்த்து பழமை வாதிகள் வாயடைத்துப் போயிருக்க அடுத்த வருடமே இரண்டவது படமாக கொதார்த்தின் பிரெத்லெஸ் 1060ல் வெளியானபோது புதிய அலை உருவாகி விட்ட்து என அனைவரும் வியந்து பாரட்டினர் . மிகப்பெரிய தக்கத்தை உண்டு பண்ணிய அந்த சினிம ஆதுரை யிலான் 66 வருட சினிமா வரலாற்றை புரட்டி போட்டது. .கொதார்த்த சொன்னது போலவே அவரது படம் சொல் புதிது சுவையும் புதியதாக இருந்த்து . வழக்கமான் மரபான் காட்சி கோணக்களை அவர் உடைத்தார் . இஷ்டப்போக்கில் காமிராவை தோளில் போட்டுக்கொண்டு பாத்திரங்களின் உடல் மொழி களை அவர் பின் தொடர்ந்து காட்சிப் படுத்தினார் . அதை கவித்துவமாக எடிட்செய்து கூடுத்ல மெருகேற்றினார் . அப்படி அவர் உருவக்கீய படத்தொகுப்பு முறையை அனைவரும் ஜம்ப் கட் என வியந்து போற்றினர. ஒரு ஊரில் ஒரு ராஜா என வரிசையாக கதை சொல்லும் சினிமாமரபை அவர் உடைத்தார் . காடக் மொழிகளில் ஒரு கலகத்தை உண்டு பண்ணி வரிசைகளை மாற்றினார் . நடுவிலிருந்து கதையை துவக்கி கதையின் துவக்கத்தையும் முடிவையும் பார்வையாலனே தீர்மானிக்க விட்டுக்கொடுத்தார். இந்த புதுமையான் முறையால் சினிமாவிலிருந்து கதை பின்னுக்கு போய் காட்சி அனுபவம் காட்சி மொழி தொழில் நுட்பம் ஆகியவை முன்னுக்கு கொண்டுவரப்பட்டது அவர் துவக்கி வைத்த இந்த வான் லீனியர் சனிமா தான இன்று உலகம் முழுக்க வணிக சினிமாவாக வும் கொண்டாடபடுகிறது அன்று தொடங்கிய அவர்து சினிமா பயணம் ஐமபதுக்கும மேற்பட்ட கலை படைபுகளாக கடந்த அறுபது ஆண்டுகளில் உற்பத்தி செய்து வந்தந. . த்றுபூ உட்பட அவரது நண்பர்கள் அனைவரும் துவக்கத்தில் காட்டிய பரிசஈத்னை முயற்சிகளிலிருந்து விலகி பின் கமர்ஷியல் படங்கள் எடுக்க பூய்வட்ட்னர். ஆனால் கொதார்த் மட்டும் துவத்தில் காட்டிய புதுமை காட்சி மொசியை கடைசி போதம் வரையிலும் சமரசம் இல்லமால் இயக்கி வந்தார் . அவர் உருவக்கிய ஒவ்வொரு பதாமும் சினிமா ரச்கர்களால் கொண்டாட்ப்பட்டன . அவர்றின் அரச்யல் தன்மை, காட்சி மொழ்யில் அவர் உருவாக்கிய தொழில் நுட்ப புதுமை ஆகியவை இப்போதும் சினிமா கற்கும் மாணவர்களுக்கு பாடங்களாக இருக்கின்றன தீவிர இட்து சாரி ஆதர்வாளரான அவர் . இந்த கருத்தாக்கத்த்லிருந்து கடைசி வரை பின் வாங்கவில்லை . வாழ்நாள் முழுக்க ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரக படங்களை இயக்கி வந்த கொதார்த்துக்கு அமெரிக்காவின் ஆஸ்கார் விருது கமிட்டி சிறப்பு வாழ்நாள் சாத்னையாளர் விருது 2010ல் கொடுக்க முன் வனத போது அவர்களின் அழைப்பை அவர் நிராகரித்தார். . அப்படிப் பட்ட சமரசமற்ற படைப்பாளியாக படைப்புக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளியில்லமால் வாழ்ந்த காரணத்தால் தான் இன்று அவர் மரணம் கூட உலகம் வியக்கும் ஒன்றாக மாறியிருக்கிறது வாழ்க்கையும் சினிமாவும் வேறு வேறல்ல என அடிக்கடி சொல்லும் அவர் சிலசமயங்களில் ஒரு சினிமாவுக்குள் தன் வாழ்க்கை சிக்கிக்கொண்டதாக கூறுவார் . அப்படித்தன் அவரது மர்ணம் எனும் க்ளைமாக்ஸ் காட்சியும் அசரே எழுதிய காட்சியாக அவர் பாணியில் வியப்புட்டும் படி அமைந்துவிட்ட்து .சினிமா எனும் மாயப்புதிருக்குள் அவர் மரைந்தே போனார் என்றும் இதை சொல்ல்லாம் - அஜயன்பாலா

March 13, 2023

கே விஸ்வநாத் மின்னி மறைந்த கலையின் உன்னதம்

அஞ்சலி
கடந்த சில நாட்களுக்கு முன் கே..விஸ்வநாத் எனும் தெலுங்கு சினிமாவின் மகத்தான் மேதை மறைவுற்ற செய்தி தென்னிந்தியா முழுக்க சமூக ஊடகங்களில் மிகப்பெரிய் அதிர் வலைகளை உருவாக்கியது இதைக் கண்ட ஒரு செய்தி ஊடகம் ஆர்வக் கோளாறில் தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி பட நடிகர் கே.விஸ்வநாத் மறைவு என செய்தி போட பலரும் கொதித்துப் போய் அந்த ஊடகத்தை இணையவாசிகள் பகிர்பகடி செய்வதையும் பார்க்க முடிந்தது. கே.விஸ்வநாத் பற்றி இந்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வ்தாக இருந்தால் கலை பற்றியும் கலைஞன் பற்றியும் குறைந்த அளவுக்காவது சில விடயங்களை சொல்லமால் கடக்க முடியாது . டைட்டானிக் படத்தின் இறுதிக்காட்சியில் கப்பல் மூழ்கும் அபாயத்தை காப்டன் அறிவித்து உயிரைக் காப்பற்றிக்கொள்ள அறிவிக்கும் போது அப்போதும் கலைந்து போகாமல் அதுவரை வாசிக்கும் இசைக்கோர்வையை விட்டு விலகாமல் உயிரே போனாலும் பரவாயில்லை என தொடர்ந்து அவர்கள் இசைக்கருவிகளை வாசிக்கும் போது உகலம் முழுக்க அனைத்து அரங்குகளிலும் கைதட்டி உணர்ச்சி வசபட்டனர். அப்படி இந்திய சினிமாவில் கலைக்கும் கலைஞனுக்குமான உறவைச்சொன்ன இயக்குனரக்ள் என்றால் நூற்றாண்டு இந்திய சினிமாவில் இருவர் மட்டுமே அந்த பெருமைகுரியவ்ர்களாக இருக்கின்றனர் ஒருவர் ஜனக் ஜனக் பாயல் பஜே எடுத்த சாந்தாராம் இன்னொருவர் அண்மையில் மறைந்த கே. விஸ்வநாத். சாந்தாரம் படங்கள் கூட கலை பற்றி மட்டும் பேசும் ஆனால் விஸ்வ நாத்தின் படங்களில் கூடுதலாக் கலையோடு சமூகத்தில் புரையோடிகிடக்கும் சாதியம் வர்க்க பேதம் பெண்ணியம் , மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவையும் கலந்து மரபும் நவீனமும் சம விதத்தில் கலந்திருப்பது அவரது தனித்தன்மை வெற்றி பெற்றவர்களுக்கு விழும் கைதட்டல்களை உற்றுப் பாருங்கள் அதில் தாளம் பிசகி தனியாக சுதி சேராமல் ஒன்று தட்டிக்கொண்டிருக்கும் தோற்றுப்போனவனின் கைகளில் சிதறும் கண்ணீர்துளிகளுக்கு பின்னால் வலியும் வேதனையுமிக்க பல கதைகள் உண்டு காசிநாதன் விஸ்வநாத் எனும் தெலுங்கு சினிமாவின் மகத்தான இயக்குனர் பெற்ற திரைப்பட வெற்றிகளுக்கு பின்னால் இருந்தது அப்படிப்ப்ட்ட தோல்வியுற்ற கலைஞனின் கதைகள் தான் 1939 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிப்ரவரி 19ல் பிறந்த கே. விஸ்வ்நாத் சென்னயில் வாஹினி ஸ்டூடியோவில் ஒரு சவுண்ட் இன்ஜீனியராகத்தான் வாழ்க்கையைத் துவக்கினார் பிற்பாடு கே.வி ரெட்டி என்பவரிடம் பாதாள பைரவியில் 1969ல் உதவி இயக்குனராக சேர்ந்தார். 1965ல் நாகேஸ்வ்ர்ராவ் காஞ்சனா ராஜ் ஸ்ரீ நடித்த ஆத்மகவுரவம் தான் அவரது முதல் திரைப்படம். தொடர்ந்து அவர் பல படங்களை இயக்கி வந்த போதும் அவை அனைத்துமே சுமாரன வெற்றி அல்லது படுதோல்விப் படங்கள் . நல்ல வேளை அவர் இந்த காலத்தில் இயக்குனராகவில்லை . இருந்தால் இரண்டாவது தோல்வியிலேயே வீட்டுக்கு அனுப்பியிருப்பர்கள் சுமார் பத்துக்கு மேற்பட்ட சுமார் படங்களுக்குப்பின் 1975ல் சிரிசிரிமுவ்வா எனும் படம் தான அவருக்கு ஓரளவு அங்கீகாரத்தை கொடுத்த்து அதில் கைவினைப் பொருட்களை விற்கும் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக்க் கொண்டு கதையை உருவாகியிருந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பும் வழியில் அடுத்த படத்துக்கான கதை உருவாகியிருக்கிறது. இச் சமயத்தில் பேர்ல்ல் சினிமா அலை உச்சத்தில் இருந்த காலகட்டம் . தானும் அதுபோல படம் பண்ணவேண்டும் . நாயகன் நாயகி இல்லாமல் வெறும் கதை தான் ஹீரோ . கதை அப்படியே பயண நேரத்தில் உருவானது . மகத்தான சங்கீக வித்வான் . இசை தான் அவருக்கு ஊன் உறக்கம் உயிர் எல்லாம் .அதைத்தாண்டி வேறு எதுவும் அவருக்கு தெரியாது. அப்படிப்பட்டவர் இசை சாதகம் செய்யும் ஆற்றங்கரையில் ஒரு தாசிகுலத்தைச் சேர்ந்த ஒரு பெண்னை சந்திக்கிறார். அவர் இசையில் உருகிபோகிறாள். அவருக்கு இசை போல் அவளுக்கு நடனம். இந்த இருவருக்கும் இடையில் இசை தான் உறவு. குரு சிஷ்ய மனோபவம். இந்த இருவருடைய உன்னதமான உறவும் பிரிவும் பின் காலத்தல் இருவரும் ஒரு தருணத்தில் மரணத்தில் ஒருசேர முத்தமிடுவதும் கதை. காரில் வந்த தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்லி இந்தக் கதையில் நட்சத்திரங்களே இல்லை எல்லாம் புதுமுகம் தான் என சொல்ல அப்போதைக்கு அருமை அருமை ஆரம்பிக்கலாம் என்றவர் பிற்பாடு படப்பிடிப்பு துவங்கும் வேலையில் தெலுங்கு சினிமாவுக்கு இந்த கதையெல்லாம் ஒத்துவருமா பெரிய ஸ்டாரை பிடியுங்கள் . வித்வான் பாத்திரத்துக்கு சிவாஜி அல்லது என் டி ராமாராவ் அல்லது நாகேஸ்வர்ராவை போடுங்கள் என சொல்ல விஸ்வநாத்துக்கு தலை சுற்றியது. சிவாஜியின் தேதியை வாங்குவதில் சிரமம் எனவே தன் நண்பர் ஏடித. நாகேஸ்வராரவிடம் இதற்கு புதுமுகம் தான் சரியாக இருக்கும் அப்படி எடுக்ககத்தான் ஆசைப்பட்டேன் என புலமப உடனே கவலையை விடுங்கள் நானே இப் படத்தை தயாரிக்கிறேன் உங்கள் விருப்பப்படி நடிகர்களை தேர்வு செய்யுங்கள் .இந்த கதை உலகில் எந்த மொழியில் வந்தாலும் வெற்றி பெறும் என ஊக்கமூட்டி அவரே இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். விஸ்வ்நாத் ஆசைப்ப்ட்டபடியே நடிகர்களை தேர்வு செய்யத்துவங்கினார். அதன்படி தேசிய நாடகப்பள்ளி யில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற சோமையாஜுலுவை வித்வான் பாத்திரத்துக்கு கண்டுபிடித்தார். யோசித்துப்பாருங்கள் தெலுங்கு சினிமாவே என்.டி ராமாராவை தேவுடா என கிருஷ்ணா அவதாரமாகவும் நடிகர் கிருஷ்னாவை துப்பாக்கி குதிரை சகிதம் கவ்பாய் வீரனாகவும் ரசித்த காலத்தில் 45 வயது புதுமுகத்தை நாயகனாக் ஒப்பந்தம் செய்வதற்கு பின்னால் எப்படிப்பட்ட துணிச்சல் இருந்திருக்க வேண்டும் இப்படி முதன்மை பாத்திரம் மட்டும் அல்லாமல் இதர பாத்திரங்களும் புதுமுகமாக ஒப்பந்தம் செய்தார்.. ஏதோ ஒரு திருமணத்தில் வரவேற்பில் தனக்கு பன்னீர் தெளித்த பெண்ணின் கண்கள் அழகாக இருக்க அப்போதைக்கு மனதில் ஸ்கேன் செய்துகொண்ட அந்த முகம் ஞாபகத்துக்கு வர அந்தபெண்ணுக்கு நாயகியாக் நடிக்கும் யோகம் கதவை தட்டியது. அவர்தான் பிற்பாடு சங்கராபரணம் ராஜலட்சுமி எனும் புகழ்பெற்ற நடிகையானார் ராஜலட்சுமிக்கு அப்போதே வயது முப்பதுக்கு மேல் இருக்கும். கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால் கே.வி,மகாதேவனை இசையமப்பாளராக ஒப்பந்தம் செய்தார் . அது போல இம்முறை டெக்னிலாகாவும் த்ரமாக அமையவேண்டும் என முடிவுசெய்த்வர் சென்னை வந்தார் .ஒளிப்பதிவாள்ராக அன்று ஒருபெயர் தென்னிந்திய திரை உலகமே உச்சரித்துக்கொண்டிருந்த்து . அந்தப் பெயர் பாலு மகேந்திரா.. கதையைக் கேட்டதும் பாலுமகேந்திரா ஒப்புக்கொண்டார் . கலைக்கு தோட்டாதரணி. அவரும் நாயகன் மூலம் பிற்பாடு புகழ் உச்சிக்கு போனார். 1980 ல் சங்க்ராபர்ணம் வெளியாகி வரலாறு படைத்த்து ..எந்த டப்பிங்கும் செய்யாமல் நேரடி தெலுங்கில் தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் வெளியாகி 25 வார்ங்கள் ஓடி வரலற்று சாதனை படைத்தது . மட்டும்லாலம்ல் கே.வி. மகாதேவனின் இசையில் தெலுங்கு பாடல்களாகவே , தமிழ் நாட்டின் பட்டிதொட்டீ எங்கும் ஒலித்தது . கோவில் காதுகுத்து கலயான்ம எங்கு பார்த்தாலும் அன்று தமிழ் நாட்டில் சங்கராபரணம் தான் . மொழியே தெரியாமல் மக்கள் அந்த பாடல்களை கொண்டாடினார். இன்றுவரை தமிழ் நாடு மற்றும் கேரளாவில் ,தெலுங்கு நேரடிபடம் செய்த சாத்னையை வேறு எந்த படமும் செய்யவில்லை. அதனைத்தொடர்ந்து தெலுங்கில் கமல் நடிக்க அதே உன்னதமான கலைக்கும் கலைஞனுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக கதை அமைத்து சாகரசங்கமம் உருவாக்கினார் . இது 1983 ல் தெலுங்கு மற்றும் தமிழல் சலங்கை ஒலி என்ற பெயரிலும் வெளியானது . இதுவும் அவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்த்து. சங்கராபரணத்தில் இருந்த பண்டிதத்தன்மை குறைந்து கொஞ்சம் நவீனமாக நுட்ப்மான காதல் கதையாக் செதுகியிருந்தார். ப்ளாஷ் பேக் உத்தியுடன் இணை வெட்டு பாணியில் அவர் உருவாக்கிய திரைக்கதை இன்றும் இந்திய சினிமாவின் அற்புதமான் திரைக்கதைகளுள் ஒன்றாக இன்றும் வியக்கப்படுகிறது. சிறந்த பாத்திரப் படைப்பு ,சிறந்த காட்சி அமைப்பு சிறந்த நடிப்பு சிறந்த இயக்கம் என பல விதங்களில் இந்தத் திரைப்படம் இன்றும் வணிக சினிமாவில் உயர்ந்து நிற்கிறது. குறிப்பாக கமல் இதுவரை நடித்த சிறந்த ஐந்து படங்களில் ஒன்றாக பேசப்படும் அளவுக்கு அவரது நடிப்பில் உச்சம் தொட்ட படம். நடனத்தை உயிராகவும் கலையாகவும் நேசிக்கும் கலைஞன் பாலு. அதனால் அவனால் கலையை மதிக்க தெரியாத சினிமாவில் கூட பணி செய்ய முடியவில்லை . இந்த உலகில் ஒருநாள் இந்த நடனக்கலையில் புகழ்பெறுவேன் என கனவு காண்கிறான். ஆனால் எதார்த்த வாழ்வில் சமையல் காரியான தாய்க்கு உதவியாக அவள் பணி செய்யும் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறான் . திருமணம் ஆகி மூன்றே நாளில் ரத்துஆகிப்போன கவலை மறக்க புகைப்படக்கலையை பொழுதுபோக்காக கொள்கிறாள் மாதவி. ஒருநாள் வெளியூருக்கு வந்த இடத்தில் புகைப்படம் எடுக்க கோவிலுக்கு போகும் போது அங்கு தரமற்ற காமிராவால் கத்துக்குட்டி போட்டோகிராபர் மூலம் புகைப்படம் எடுக்க பாலு (கமல்) கஷ்டப்படுவதை பார்க்கிறாள் . அவனுக்கு நடனத்தின் மீது ஆர்வம் என தெரிய வந்து மறைந்திருந்து அவன் விரும்பும் வகையில் புகைப்படம் எடுக்கிறாள் .இருவரும் ப்பிரிண்ட் போட ஸ்டூடியிவுக்கு ஒரேசமயத்தில் வர அங்கு மாதவி தான் விரும்பிய கோணத்தில் தன்னை அருமையாக புகைப் படங்கள் எடுத்திருப்ப்தை பாலு கண்டு வியக்கிறான். பாலுவின் அம்மா சமையல் வேலை செய்ய வந்த திரும்ண நிகழ்வில் மேடையில் நடக்கும் நடன் நிகழ்ச்சிக்கு அதே இசையில் சமையல் கூடத்தில் பாலு தன் தாய்க்கு நடனம் ஆடிக் கான்பிக்கிறான். அங்கு வரும் மாதவிக்கு அப்போதுதான் அவனுடைய முழுத்திறமையும் தெரிய வருகிறது.. அவள் பணி செய்யும் ஆங்கில வார் ஏட்டில் அவன் புகைப்பட்த்துடன் அவனைப்பற்றிய கட்டுரை எழுதி அவனை உலகமறியச்செய்கிறாள் தொடர்ந்து இருவரும் சந்திக்க ஒருநாள் அவனிடம் அவள் டெல்லியில் நடக்கும் இந்திய அளவிளான் நடன நிகழ்ச்சிக்கு போக விருப்பமா என கேட்கிறாள் . அதற்கு அவன் எனக்கு ஆசைதான் ஆனால் அதற்கு அழைப்பிதழ் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் போய் வர பணம வேண்டுமே எனகீறான் பணம் நான் தருகிறேன் என என மாதவி சொல்ல சரி அழைப்பிதழ் வேண்டுமே என கேட்க அவளோ அதுவும் கொண்டு வந்திருகிறேன் போய்வாருங்கள் எனச் சொல்ல் ஆச்சர்யத்துடன் அவன் அந்த அழைப்பிதழை வாங்கி ப்பார்க்கும் போது அதில் பிரபல நடன மேதைகள் புகைப்ப்டம் இருப்பதைக் கண்டு வியப்பவன் அதன் ஒரு பக்கத்தில் தன் பெயரும் புகைப்படமும் நிகழ்ச்சியின் அங்கமாக இடம் பெற்றிருப்பதைக்க்ண்டு சொல்ல வொண்ணா உணர்ச்சி அவன் மனதில் அலையால் எழுகிறது சட்டென என்ன செயவதென தெரியாமல் அவள் கைவிரகல்களைப்பற்ரி அழுகிறான் திறமைமிக்க கலைஞன் எதிர்பார்க்கும் அங்கீகாரத்தை ஒரு பெண் எந்த பலனும் எதிர்பாராமல் அவள் நல்ல மனம் ஒரு குடை பொல வந்து அவன் கனவை நனவாக்குவது அவன் பட்ட காயஙக்ளுகெல்லாம மழைத்துளி போல ஆறுதல் சொல்வது . அவன் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட மாதவிக்கு முன்பே திருமணம் ஆகி முற்று பெறாத கோலமாக பாதியில் இருக்கும் போதுதான் அவள் இதை செய்துள்ளால் என பார்வையாளன் அறிய வரும் பொது அவள் இதயத்தின் ஆழம் இன்னும் கூடிவிடுகிறது உண்மையில் அவள் அவனுக்கு செய்வது எல்லாம் சிறு சிறு காரியங்கள் தான். ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் அந்தக் காட்சியை இயக்குனர் செதுக்கி நமக்கு காட்சிபடுத்தும் சூழல் மாதவியாக் நடித்திருக்கும் ஜெயப்பிரதாவின் பாத்திரபடைப்பு அவரது சொல்லமுடியாத கதை கொண்ட கருவிழிகள் .. பொட்டு புடவை அனைத்தும் சேர்ந்து அந்த மாதவி பாத்திரத்துக்கு பெரும் காவியத் தன்மையை உருவாக்கி அழியா சித்திரமாக நம் மனதில் பதியவைத்து விடுகின்றன. துவக்க காட்சியில் பத்ரிக்கையாளர் கமல் தவறான விமரசனத்தை எழுதிவிட்ட்தாக பத்ரிக்கை அலுவலகத்தில் எஸ் பி ஷைலஜா புகார் செய்ய வரும்போது டேப் ரெக்கார்டரில் பஞ்ச பூதங்களும் என பாடலைப் போட்டு பரதம் கதக் குச்சுப்புடி,, கதக்களி என தனித்தனியே ஆடிக்காண்பிக்கும் காட்சி , ஜெயப்ரதா கமலை மறைந்திருந்து புகைப்ப்டம் எடுத்து காண்பிக்கும் காட்சி இறுதியில் தகிட ததுமி பாடலுக்கு கிணற்று சுவற்றில் மழையில் ஆடும் காட்சி என பல காட்சிகளில் உன்னத காட்சி அனுபவத்தை உருவாக்கிய இயக்குனர் கே. விஸ்வநாத். ஒரு காட்சியில் ஜெய்பிரதாவிடம் கமல் காத்லைச்சொல்ல வரும் போது வாசலில் இருக்கும் பூந்தொட்டியில் ஒரு ரோஜாச் செடி அவனைத் தடுத்து போகாதே என இழுக்கும் . கமலுக்கு அப்போது உள்ளே போனபின் அடுத்து நடக்கவிருக்கும் அதிர்ச்சி சம்பவம் தெரியாது . இது விஸ்வநாத்தின் நுணுக்க பாணி கதை விவரிப்புக்கு ஒரு பருக்கை . காதலின் ஆழத்தை உறவுகளின் உன்னத தருணங்களை கலை மற்றும் கலைஞனின் அபிலாஷைகளை இந்திய சினிமாவில் சலங்கை ஒலி போல நுட்பமாக விவரித்தபடம் வேறு இல்லை. உண்மையில் இப்போதும் ஒவ்வொருமுறை இப்பட்த்தை திரும்பப் பார்க்க கிடைக்கும் தருணங்களில் அட இந்த படம் தமிழில் நேரடி படமாக இருக்க்க் கூடாதா என தனிப்ப்ட்ட முறையில் பொறாமைப்படவைக்கும் படம் இப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவின் இசையில் உருவான அனைத்து பாடலகளும் இன்னொரு காரணம் தொடர்ந்து அவர் 1985ல் எடுத்த சுவாதி முத்யம் கமல் ராதிகா நடிக்க தமிழ்ல் சிப்பிக்குள் முத்து என வெளியானது . இதுவும் பல் நுணுக்க உணர்வுகளின் சங்கம்ம் .இதுவும் இளையராகாவின் ஆகச்சிறந்த பங்களிப்பால் மிகப்பெரிய வெற்றியை கே. விஸ்வநாத் அவர்களுக்கு பெற்றுத்தந்தபடம் . மேற் சொன்ன இந்த மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை மூன்றுமே பெண் சார்ந்த பிரச்னைகளை சமூக நோக்கில் பேசியவை . சமூகத்தால் ஒடுகப்பட்ட தாசி குலத்துப்பெண், மணமான பெண்னின் காதல், விதவைத்திருமணம் என பல பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கியது கேவிஸ்பநாத் கடைசிப்படமான 2010 ல் வெளியான சுப்ரபாதம் வரை கிட்ட்த்ட்ட 56 படங்களை இயக்கி வந்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் உயர்ந்த விருதுகளான தாதாசாகிப் பால்கே ,பதமஸ்ரீ மற்றும் தன் திரைக்க்லைப்பயணத்தில் பத்துக்கும் மேற்ப்ட்ட தேசிய விருதுகளை வெவ்வேறு பிரிவுகளில் தன் படங்களுக்காக பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது தொடர்ந்து பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிகராகவும் பரிணமித்து வந்திருக்கிறார் . அவரது மேற்கண்ட சாதனைகளை பேசாமல் அவர் இறந்த போது அவரை வெறும் நடிகராக மட்டுமே அந்த ஊடகம் அறிவித்த்து நம் காலத்தின்மிகப்பெரிய அவலம் நன்றி: தீராநதி குமுதம் .

அஞ்சலி : ஆயிரம் படம் கண்ட ஆரூர்தாஸ்

புகழ் மண்ணில் புதைந்தது ஆரூர் தந்த மூன்றாவது முத்து -அஜயன் பாலா , #ajayanbala@gmail.com
கண்களைக்காட்டிலும் காதுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்த உலகின் ஒரே சமூகம் தமிழ் சமூகம் தான் இல்லாவிட்டால் தமிழகத்தில் மூலை முடுக்குகளில் கல்யாணம் காது குத்து என எந்த விழா நடந்தாலும் ஒரு படத்தின் வசனத்தை ஊருக்கே அலறவிட்டு திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்திருப்பார்களா . நம் மக்கள் ? இத்தனைக்கும் பராசக்தி போல அடுக்கு மொழியோ திருவிளையாடல் போல பக்தி பரவச ஊற்றோ இல்லாத வெறும் ஒருசராசரி சமூகதிரைப்படம் தான் விதி. ஆனாலும் தமிழ் மக்கள் இந்த படத்தின் வசனத்துக்கு கொடுத்த மதிப்பும் மரியாதையும் தமிழ் பண்பாட்டின் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய முக்கிய அம்சம் . அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த உரையாடல் எழுதிய திரைப்பட வசன எழுத்தாளர் ஆரூர்தாஸ் நேற்று மாலை 6 மணிக்கு தன் 91 வயதில் தன் வாழ்வை பூரணமாக நிறைவு செய்துகொண்டார்.. இறக்கும்போது எந்த நோய் நொடிகள் எதுவும் இல்லை . ஒரு வருடத்துக்கு முன் மனைவி இறந்த துக்கம் மட்டுமே அவரை நிம்மதி இல்லாமல் செய்துவிட்டது. அதுவரை சுறுசுறுப்பாக இயங்கி வந்த அவர் தன் மனைவி இறப்புக்குப் பின் மன அழுத்தம் மிகுந்து அனைவரிடமும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். பேபி என அவர் அன்பாய் அழைக்கும் அவர் மனைவி எப்போதும் அமரும் அந்த நாற்காலியில் யாரையும் பயன்படுத்த அனுமதிக்காமல் அந்த வெற்று நார்காலியை பார்த்தபடியே இடைப்பட்ட நாட்களை கழித்து வந்தவர் நேற்று மாலை 6மணிக்கு முழுவதுமாய் மூச்சை நிறுத்திக்கொண்டார் . ஆரூர் தாஸின் பெருமையை ஒரு புரிதலுக்காக விதி படத்திலிருந்து துவங்கினாலும் அவரது இதர சாதனைகளின் உச்சங்கள் அளப்பரியது. அதில் ஒன்று . ஆயிரம் படங்களுக்கு எழுத்துப் பணி புரிந்தவர் என்பது முக்கியமானது. தமிழ் சினிமாவில் இனி வேறு எவரும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத சாதனை. இது. போட்டியும் சூழ்ச்சியும் பொறாமையும் மிகுந்த திரைப்பட உலகில் இன்று ஒரு எழுத்தாளனுக்கு ஒரு படம் எழுதி முடித்து வெளிவந்து டைட்டிலில் பேர் வாங்குவதற்குள்ளாகவே மூச்சு முட்டி நாக்கு தள்ளி விடும் சூழலில் ஆயிரம் படங்கள் வசனம் என்பது அத்தனை எளிதாக கடந்து போகும் விடயமல்ல . கடந்த பத்து பதினைந்து வருடங்களாக திரை எழுத்தாளனாக என்னால் ஒரு பத்து பதினைந்து படங்களில் பணியாற்ற முடிந்தது என்றால் அதற்கு ஆரூர்தாஸ் மட்டுமே காரணம் . ஒவ்வொரு படத்திலும் உச்ச கட்ட பிரச்சனைகள் தலையெடுத்து இனி சினிமாவில் எழுத்துத் துறையே வேண்டாம் என நான் முடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் ஆரூர்தாஸ் அவர்களை எண்ணிப் பார்ப்பேன். மறுநாள் நான் மீண்டும் உற்சாகமாக என் பயணத்தை துவங்க அவர் ஆயிரம் படங்களுக்கு பட்ட அவஸ்தையும் அவமானங்களையும் எண்ணிப்பார்க்கும் அந்த ஒரு கணம் போதும் ஆயிரம் வாட்ஸ் உற்சாகம் என் தோளைப் பற்றிக்கொண்டு மீண்டும் அடுத்த ப்டத்துக்கான எழுத்துப் பணி நோக்கி உந்தித்தள்ளும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் 1931ம் ஆண்டு சந்தியாகு நாடார் ஆரோக்கிய மேரிக்கு மகனாகப் பிறந்தவர் பிற்பாடு ஆரூர்தாஸ் என அழைக்கப்பட்ட ஜேசுதாஸ் . தஞ்சை திருவாரூரில் பள்ளி படிப்பு படிக்கும் போது கலைஞர் கருணாநிதியின் நாடகங்களால் ஈர்க்கப்பட்டு சிறுவயதிலேயே நாடகம் எழுதி அதை தானே மேடையேற்றம் செய்த தாஸ் தன் நாடகத்துக்கு தனே சுவர்களில் விளம்பரம் எழுதும் வேலையை செய்யும் அளவுக்கு கலையின் பால் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார் . தஞ்சை பல்கலை கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு பட்டம் படித்தவர் என்பது யாரும் அறியாத செய்தி. பிற்பாடு திருவாரூருக்கு வந்த கவிஞர் சுரதாவின் அறிமுகம் சினிமாவுக்கு அவரை வர தூண்டியது . சென்னைக்கு வந்து தஞ்சை இராமையா தாஸ் அவர்களிடம் வசன உதவியாளராக பணிபுரியும் வாய்ப்புகிட்ட அவர்தான் ஜேசுதாஸ் என்ற பெயரை ஆரூர்தாஸ் என மாற்றி அருளினார் . தேவர் பிலிம்ஸ் எடுத்த வாழவைத்த தெய்வம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகம் ஆகிய ஆரூர்தாஸ்க்கு சாவித்திரியின் அறிமுகம் தன் பிற்பாடு அவருக்கு பெரும்புகழ்தேடித்தந்த பாசமலர் படத்துக்கு வசனகர்த்தாவாக 1961ல் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தது. . அதன் பிறகு அவர் வாழ்க்கையில் உயரப்பறந்த கொடி கடைசியாக அவர் பணிபுரிந்த நடிகர் வடிவேலுவின் தெனாலிராமன் வரை இறங்கவே இல்லை நேரடிப்படங்கள் காலத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழிபடங்கள் பெருகத்துவங்கிய போது வைஜயந்தி ஐ பி எஸ் .. பூ ஒன்று புயலானது என படையெடுத்த போது அதன் பிரமாண்ட வெற்றிகளுக்கும் இவரது வசனம் பெரும் தீயை பற்றவைத்தது. . ஒரு திரை எழுத்தாளன் ஆயுசு பத்து வருடங்கள் , அதன்பிறகு அடுத்த தலைமுறை அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் ஆனால் தன் அறுபதுகளின் காலம் முடிந்து பின் எண்பதுகளிலும் விதி மூலம் விஸ்வரூபம் பெற்று தொடர்ந்து அவர் பணியாற்றியது தான் அவரது ஆயிரம் படங்கள் பட்டியல் உயர காரணமாக அமைந்தது மற்ற கலைஞர்களை விடவும் எழுத்துத் துறையில் இருப்பவர்கள் அதிக சுய கவுரவமும் உணர்ச்சிக் கொந்தளிப்புடனும் இருப்பவர்கள் . எது அவர்கள் படைப்புக்கு மூலதனமோ அதுவே இத்துறையில் பிரச்சனையுமாகும் . அப்படிப்பட்ட சூழலில் எளிதில் உணர்ச்சி வசப்படும் ஆரூர்தாஸ் அவர்கள் இப்படி ஆயிரம் படங்களில் பணிபுரிந்த சாதனை என்னை பொறுத்த வரை எம் ஜி ஆர் சிவாஜியின் சாதனைகளுக்கு நிகரானது. இப்படி இந்த இரு துருவங்களும் புகழ் உச்சியில் கொடிகட்டிப் பறந்த அந்த அறுபதுகளில் மொத்த திரை உலகமும் எம் ஜி ஆர் சிவாஜி என இரண்டு குழுவாக பிரிந்து கிடந்தது. ஒருவருடைய குழுவை சேர்ந்தவர் இன்னொரு குழுவுக்குப் போய்விட்டால் துரோக பட்டம் விழுந்து விடும் . இதற்கு பயந்துகொண்டு நடிகர் நடிகைகள் தவிர தொழில் நுட்பகலைஞர்கள் எவருமே அணி மாறாமல் விசுவாசியாய் இருந்தார்கள் அப்படிப்பட்ட போட்டிநிறைந்த காலத்தில் இருவராலும் தவிர்க்க முடியாத எழுத்தாளராக வலம் வந்து இருவருக்கும் தொடர் வெற்றிகள் பெற்றுதந்தது அவருடைய இன்னொரு சாதனை. சிவாஜியின் பாசமலர் படித்தால் மட்டும் போதுமா பார் மகளே பார் தெய்வ மகன் என தொடர்ந்து 28 படங்களுக்கும் எம் ஜி ஆரின் தாய் சொல்லைத் தட்டாதே , தாயைக் காத்த தனயன் வேட்டைக்காரன், பரிசு ,பறக்கும் பாவை ,அன்பே வா என 24 படங்களுக்கும் என இருவருக்கும் வசனம் எழுதியவர். இதில் அவரவர் படங்களுக்கேற்ப எழுதுவதும் தனிக்க்லை எம் ஜி ஆர் படங்களுக்கு நாயக பாத்திர வடிவமைப்பும் அவருகேற்ற காட்சி அமைப்பும் அதில் எளிமையும் சுவாரசியமும் முக்கியம் . மற்றபடி வசனம் புரியும்படி இருந்தல் போதும் இறுதியில் நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான் என்ற நீதி பின்பற்றப்படவேண்டும் ஆனால் சிவாஜிக்கு எழுதுவது சவால் நிறைந்தது .அதில் நாயகனை விடவும் கதையும் காட்சியமைப்பும் அழுத்தமாக இருக்க வேண்டும் சிவாஜிக்கு மட்டுமல்லாமல் உடன் நடிக்கும் பாத்திரத்துக்கும் தேவைப்படும் இடங்களில் வசனம் பிரமாதமாக் அமையவேண்டும் . வசனம் நன்றாக இருந்தால்தான் நடிப்பும் சிறப்பாக அமையும். வசனம் சரியாக அமையாவிட்டால் வெறும் நடிப்பை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. அதனால் ஆரூர்தாஸ் அவர்களுக்கு எம் ஜி ஆரைவிடவும் சிவாஜிக்கு எழுதுவதில்தான் கூடுதல் விருப்பம் .காரணம் அதில் தான் அவரது முழுத்திறமையும் காண்பிக்க முடியும். அவரது படங்களின் வசன திறமைக்கு எடுத்துக்கட்டாக பலரும் பாசமலர் படத்தில் சிவாஜி ஜெமினி பேசும் வசனங்களை உதாரணமாகச் சொல்வார்கள் .ஆனால் எனக்கு அவர் படங்களில் தெய்வ மகன் படத்தில் அப்பா சிவாஜியோடு முகம் கருகிய மகன் சிவாஜி பேசும் காட்சி மிகவும் பிடிக்கும் அந்த காட்சியின் ஒட்டுமொத்த வசனமும் சிறப்பு என்றாலும் ஒருகட்டத்தில் மகன் அப்பாவை பார்த்து - நான் பொறந்தப்ப் நீங்க பணக்காராரா தான இருந்தீங்க - ஆமாம் - அப்ப நான் விகாரமா பொறந்தேங்கிற ஒரே காரணத்துக்காகத்தானே என்னை வேண்டாத பொருளை குப்பைத்தொட்டியில வீசி எறியிற மாதிரி என்னை எறிஞ்சிட்டீங்களா .. நீங்க பொறந்தபோ உங்க அப்பா இதே மாதிரிதான் செய்ஞ்சாரா - எது - இல்லை நீங்களும் என்னை மாதிரிதான இருக்கீங்க அதனால் உங்கப்பா உங்களை வேணாம்னு சொல்லிட்டாரான்னு கேட்டேன் இல்லை ஏன் அவர் அழகா இருப்பார் இந்த வேத்னையை புரிஞ்சுக்க முடியாதவர் இல்லை உங்கப்பா ஏழை அதனாலதான் அவருக்கு இருதயம் பாசம் இரக்கம் எல்லாமே இருந்தது ஆனா எங்கப்பா பணக்காரன் அவர்கிட்ட இரும்புப் பெட்டி மட்டும்தான் இருந்தது . இப்படி வசனத்தில் உணர்ச்சிகளைத்தாண்டி உள்ளூணர்வை தோண்டி எடுக்கும் வசனங்கள் படம் முழுக்க விரவிக்கிடக்கும் இப்படி போட்டி நடிகர்களுக்கு ஒரே சமயத்தில் எழுதியது மட்டுமல்லாமல் போட்டி தயாரிப்பு கம்பெனிகளுக்கும் தொடர்ந்து வசன எழுத்தாளராக பணி புரிந்தது அவருடைய இன்னொரு சாதனை. தேவர் பிலிஸ் கம்பெனியில் அவர் பயணத்தை துவக்கினாலும் தொடர்ந்து அவர் ஏவி எம் வாஹினி போன்ற நிறுவங்களுக்கும் அதே சமயத்தில் எழுதிவந்தார் இப்படி ஒரே சமயத்தில் அவர் எப்படி இத்தனை படங்களுக்கு பணிபுரிந்தார் இத்தனை தயாரிப்பாளர்களை இத்தனை இயக்குனர்களை இத்தனை நடிகர்களை எப்படி அவர் திருப்திபடுத்தியிருப்பார் என்பதை யோசித்துப்பார்க்கும் போது அது உண்மையில் சர்கஸ்களில் பார்விளையாடுவதைக்காட்டிலும் சாகசம் நிறைந்த காரியம் . எப்போதும் கற்பனையிலும் உணர்ச்சியிலும் மிதக்கும் ஒரு படைப்பாளன் எப்படி ஆளுமை பணிகளிலும் கொடிகட்டிப்பரந்தார் என்பது மேலான்மை ஆய்வு பட்டப்படிப்புக்கே தகுதியான ஒரு வாழ்க்கைப்பாடம். இவை அனைத்தையும் மீறி இதை படங்களுக்கு உழைக்க அவரிடம் இருந்த ஆற்றலும் கற்பனையும் உடல் பரமாரிப்பும் ஒழுக்க பண்பும் இன்னொரு ஆச்சரியம்
இப்படி புகழ் வாய்ந்த எழுத்துலக சாதனையாளர்கள் ஆரூர்தாஸின் மரணத்துக்கு பெருமை கூட்டும் வகையில் பல பரிசுகள் அவருக்கு கிட்டிருந்ததல்லாம் ஆறுமாதங்களுக்குமுன் தமிழக அரசு சார்பாக கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி கலைத்துறை வித்தகர் விருதை அறிவித்து அதோடு நில்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக அவர் வீட்டுக்கே சென்று படுக்கையில் இருந்த அவருக்கு தன் கைகளால் வழங்கியது ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு அரசாங்கம் செய்த தகுதியான கவுரவம். ஆனால் அதேசமயம் சிறு நடிகரின் வைபவத்துக்கு திரண்டு வந்து வாழ்த்தும் இந்த திரையுலகம் இந்த மிகபெரிய சாதனையாளரின் இறப்பை புறக்கணித்தது பெரும் வருத்ததுக்குரியது. இறப்பு வீட்டுக்கு சிவக்குமார் வைரமுத்து பாக்யராஜ் தவிர சமகால நட்சத்திரங்கள் ஒருவரும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்பது வேதனைக்கும் வருத்தத்திற்குரிய விடயம் . நன்றி: அருஞ்சொல் வலைத்தளம் இதழ்

November 13, 2022

கும்லானி மலியம் - சிறுகதை ````````````````````````````````````````````````அஜயன்பாலா

கும்லானி மலியம் இருக்கா ..? அவன் கேட்டதும் சிப்பந்தி ஒரு நிமிடம் துணுக்குற்றார் போல அவனையே பார்த்தார் - என்ன கேட்டீங்க ? - கும்லானி மலியம் ..! - அப்படீன்னா …? - என்னது கும்லானி மலியம்னா தெரியாதா ? அந்த சிங்கிதா உணவு விடுதி நகரின் பணக்காரர்கள் குடும்ப மற்றும் தொழில் சார்ந்த நண்பர்களை சந்திக்க தேர்ந்தெடுக்கும் பாரம்பர்ய விடுதியானதால் அனைவரும் தத்தமது இணையர்களுடன் சன்னமாக பேசிக்கொண்டே உணவு அருந்துவதில் கவனமாக இருந்தனர். ஸ்பூன்கள் முட்கரண்டிகள் தட்டில் உரசும் சத்தம் அவர்கள் பேச்சைவிடவும் கூடுதல் சத்தமாக இருந்தது. ஐ வில் ஃபாலோ யூ ரிக்கி நெல்சனின் ஜாஸ் இசை ஸ்பீக்கரில் அந்த காலை நேரத்தை இன்னும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது . உடன் அப் பாடலின் லயத்துக்கு தகுந்தபடி ஒயிலாக உணவுத் தட்டுகளை சுமந்து வரும் சிப்பந்தி அந்த லயம் சிதறாமல் ஒரு மேசையின் மீது உணவுதட்டுக்களை எடுத்து மேசையை நிரவிக்கொண்டிருந்தார் இப்படியான சூழல் காரணமாகவோ என்னவோ அச்சமயம் யாரும் இவர்களது சம்பாஷணையை கவனிக்கவில்லை. சார் எனக்கு புரியவில்லை இன்னும் ஒருமுறை சொல்ல முடியுமா ? என சொல்லிக்கொண்டே காதை அவர் பக்கமாக் திருப்பியபடி அந்த சிப்பந்தி அவர் சொலவதைக் கேட்க வசதியாக தாயராக இன்னும் சற்று குனிய அந்த வாடிக்கையாளருக்கு சுருக்கென கோபம் என்ன சார் எத்தனை தடவை கேக்குறது .. கும்லானி மலியம் ஒருநிமிடம் அந்த சிப்பந்திக்கு எல்லாமே மறந்துவிட்டது . வாழ்நாளில் இதுவரை கேட்டிராத ஒரு உணவுப்பெயரை ஒருவன் தன்னிடம் ஆர்டர் சொல்லும் போது இப்படி விழிப்பது தங்களது விடுதிக்கு அவமனாத்தை உண்டுபண்ணுமோ என்ற அச்சமும் அவனுக்கு வந்து போனது…. பின் தன்னை கடந்து போகும் சக சிப்பந்தியை நிறுத்தி வாடிக்கையாளரை நோக்கி - இதோ இவர்கிட்ட சொல்லுங்க எனக் கேட்க திரும்பவும் அந்த வாடிக்கையாளர் கும்லானி மலியம் கிடைக்குமா ? இல்லையா லேட் ஆனாலும் பராவியில்லை .. பதிலுக்கு அவனும் ஒரு நிமிடம் யோசித்து இது என்ன வகை உணவு சார் .. நார்த்தா சவுத்தா சைனீஸா இத்தாலியா மெடிட்டேரிய்னா மெக்சிகனா? அதுவரை அமர்ந்திருந்த வாடிக்கையாளன் கோபத்துடன் எழுந்து நின்றான். இதை அந்த சிப்பந்திகள் இருவருமே எதிர்பார்க்கவில்லை . அட இப்ப என்ன சார் ஆச்சு அவர்களில் ஒருவன் அவர் கையை பிடித்து உட்காரும்படி அழுத்த அவன் உடனே அவன் கையை உதறிவிட்டு கோவத்துடன் கேஷியரை நோக்கித்திரும்பி . ஹலோ யாரு மேனேஜர் .. அந்த சூழலில் இப்படி சட்டென கோவப்படுவது கொஞ்சம் மிகை தான் . ஆனால் அவன் திட்டமிட்டே செய்வது போல உடலை விறைப்பாக வைத்துக்கொண்டு கலசராயின் இருபககெட்டிலும் கையை மறைத்துக்கொண்டு கோவத்துடன் விடுதி முழுக்க திரும்பிப்பார்த்தான் அனைவரது பார்வைகளும் அவனிடம் திரும்பி நிலைகுத்தின. . மேனேஜர் போல டை அணிந்த ஒருவர் அவனை நோக்கி ஓடி வந்தார். நாந்தான் சார் .. சார் என்ன வேணும் எதுக்கு இப்ப சத்தம் ? கும்லானி மலியம் கிடைக்குமா கிடைக்காதா என அவன் அனைவரும் கேட்கும்படி உரக்கக்கேட்டான் அவர் கிடைக்குங்க நான் ரெடி பண்றேன் எதுக்கு இப்ப கத்தறீங்க எல்லாரும் பாக்கறாங்க .. மொதல்ல உட்காருங்க என அருகே வந்து கொஞ்சம் கனிவும் கோபமும் கண்டிப்புமான குரலில் உட்கார வைக்க முயன்றான் . அவன் ஒரு வழியாக சமாதானமடைந்தவனாக மீண்டும் உட்கார்ந்த்ததும் மேனேஜராக சொல்லிக்கொண்ட நபர் சட்டென திரும்பி அது வரை அங்கு நின்ற இரு சிப்பந்திகளிடமும் கோபமாக முறைத்து பின் காதில் அவரகளிடம் ஏதொ சொல்ல அவர்களும் சட்டென விறைப்பு தட்டி கண்னாடிக் கதவை தள்ளிக் கொண்டு உணவு தயாரிக்கும் பகுதிக்குள் வேகமாக விரைந்த்னர் .. இப்போது அனைவரும் மீண்டும் சகஜமாக தத்தமது மேசையில் கரண்டிகளின் சத்தங்களுடன் பேசக்கொண்டே சாப்பிடுவதை தொடர்ந்தாலும் அவர்கள் அனைவரது உதடுகளும் கும்லானி மலியம் என்ற பெயரை சந்தேகத்துடன் உச்சரிக்கத்துவங்கியது . ஒரு சிலரோ இதர சிப்பந்திளை அழைத்து தங்களுக்கும் அந்த உணவை ஆர்டர் செய்ய சிப்பந்திகள் அச்சமும் கலவரமுமக கிச்சனுக்குள் ஓடத்துவங்கினர் அந்த உணவு விடுதியின் தலைமை உணவு உற்பத்தியாளருக்கு இது பெரும் சவாலாக இருந்தது இது வரை முன்பின் கேட்டிராத ஒரு உணவு பணடத்துக்கு திடீரென கோரிக்கைகள் குவிய என்ன செய்வது எனத் தெரியாமல் தன் உதவியாளர்களுடன் தீவிரமாக ஆலோசனையில் இறங்கினார் இது ஒருபுறமிருக்க விடுதியில் பலரும் கூகுளில் கும்லானி மலியம் என தேடலைத் துவங்கினர் .. சிலர் மனைவியிடம் கேட்டு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினர். கும்லானி மலியம் ஆரடர் பண்ணியிருக்கேன் இப்பவே எச்சில் ஊறுகிறது என ஓட்டலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் செல்ஃபி எடுத்து முகநூலில் நிலைத்தகவல் போட கும்லானி மல்லியம் இணையத்தில் பலருக்கும் பரவத்துவங்கியது இப்படியாக ஒரு பத்து நிமிடத்தில் அந்த விடுதியில் துவங்கி பத்து நூறு ஆயிரம் என கிளை பிரிந்து அடுத்த ஐந்து நிமிடங்களில் ஐயாயிரம் பேருக்கு மேல் கும்லானி மலியம் பெயர் அலைவரிசை 5 உபயத்தில் துரிதமாய் பரவத்துவங்கியது . தகவல் சேர்ந்த பல வீடுகளில் சில வற்றின் சமயலறைகளில் கும்லானி மலியம் பரிசோதனை முயற்சிகள் நடக்கவும் துவங்கின அந்த உணவு விடுதியில் முதல் ஆளாக கும்லானி மலியம் கேட்ட அந்த வினொத வாடிக்கையாளன் ஏதோ போன் வந்தது என எழுந்து வெளியில் போனபோது மொத்த விடுதியும் அவனையே பார்க்கத்துவங்கியது . இரண்டு வராம் கழித்து யூடியுப்களில் கும்லானி மலியம் செய்வது குறித்த பல ரிசிப்பிக்கள் வரத்துவங்கின .நம்மூர் கொழுக்கட்டை சீனாவுக்கு போய் மோஸ் ஆனது போல நம் பழைய உணவு கல்கண்டு உப்புமா தான் வெளி நாட்டுக்கு போய் கும்லானி மலியம் ஆகிவிட்டதாக ஒருவர் காணொலி இட அதுவே அனைவராலும் ஏகோபித்த கும்லானி மலியாமக அங்கீகரிக்கபட்டது அனைவரும் கும்லானி மலியம் சபபிடுவதன் மூலம் வரவிருக்கும் புதிய நோயை விரட்டி அடிக்க முடியும் என நாட்டின் அதிபர் அவர்கள் தன் மாதந்திர வானொலி உரையில் குறிப்பிட்டு உடன் அதன் அங்க்கீகரிக்கப்ப்ட செய் வழி முறைமையையும் பொறுமையகா அனைவரும் .கேட்டு எழுதும்வகையில் நேரம் ஒதுக்கி விவரித்தார் ஒரு லிட்டர் பால்.. 500 கிராம் அவல் ,, கல்கண்டு 250 கிராம் என ஒவ்வொன்றையும் சொல்லும் போது நிதானமாக அதன் ஆங்கில பெயரையும் சொல்லி எழுதுவதற்கான் நேர இடைவெளிவிட்டு சொன்னதை பலரும் சிலாகித்தனர். மறுநாள் . பத்ரிக்கை செய்திகளும் அதிபரின் பெருந்தன்மை குறித்து எழுதின இரண்டு வருடம் கழித்து போர்ப்ஸ் இணைய இதழில் இந்தியாவில் கும்லானி மலியம் உணவு விடுதிகள் முன்னூறுக்குமேற்ப்ட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருவதுடன் இன்னும் நூறுகிளைகள இந்த் ஆண்டில் அதிகப்ப்டுத்த்ப்படுத்த இருப்பதாக செய்தி குறிப்பை வெளியிட்டிருந்த்து . அதன் அருகே சிரித்த முகத்துடன் வெளியான இந்திய வர்த்தகப்பிரிவு தலைமை அதிகாரியின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த அந்த சிங்கிதா உணவு விடுதி மேலாளருக்கு மட்டும் அவர் யாரென நன்கு தெரிந்திருந்தது . UYIR EZUTHTHU .OCTOBER 2022 ------------------------------------------------------------------

March 20, 2022

இந்திய இசைக்குயில் - லதா - அஜயன்பாலா

நான் பால்ய காலத்தில் ஒரு தீவிர வானொலி ரசிகன் பள்ளிப் பருவம் முழுக்க வானொலி தான் என் மகிழ்ச்சியின் கருந்துளையக இருந்தது . .. காலையில் ஏழரைக்கோ என்னவோ தென்கச்சி கோ சுவமநாதன் இன்று இரு தகவல் எனும் தலைப்பில் ஒரு கதை சொல்வார் . அந்தக் கதை என்ன என கேட்டுவிட்டு காலைக்கடன் கழிக்க பின் கட்டுக்கு ஓடுவேன் குளித்து முடித்து பின் சாப்பிட்டு யூனிபார்ம் போடும் போது எட்ட்ரை மணிக்கு நேயர் விருப்பம் பாடல் துவங்கும் அதன் துவக்க இசை ”டேய் ஸ்கூலுக்கு டமயாச்சு ஓடு என நம்மை சொல்லும்”> அப்படி ஒரு சுறுசுறுப்பாக்கும் இசை . எனக்கு தெரிந்து எண்பதுகளில் பள்ளி வாழ்க்கையை துவக்கிய அனைவருக்கும், இந்த இசை வாழ்க்கையோடு கலந்துவிட்டிருக்கும். பள்ளிக்கு ஒரு கி மீட்டர் மகாபாலிபுரம் டு திருக்கழுக்குன்றம் முக்கிய சாலை யில் நடக்கவேண்டும் 20 நிமிடம் ஓட்டமும் நடையுமாக போக வேண்டும். வழி முழுக்க சின்னதும் பெரியதுமான கடைகள் . அதில் வானொலியில் நேயர் விருப்பம் பாடல்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே பள்ளி செல்வேன். பெரும்பாலும் புதுப் பட பாடல்கள். இளையராஜா தான் வழித்துணைவன் . மதியம் வீட்டுக்கு சாப்பிட வருவோம் அப்போது வானொலியில் ஆகாச் வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயனஸுவாமி . அது போல பள்ளி விட்டு மாலை .. வீடு திரும்பும் போது சாயா கீத் வழியெல்லாம் இந்தி பட பாட்ல்கள் கேட்கும் இந்தி எனக்கு அர்த்தம் புரியாவிட்டாலும் ஆர்வத்துடன் பாடலை கேட்டுக்கொண்டே நடப்பேன் . எனக்கு ஒருமுறை பாடல் கேட்டல மனதில் அதன் ட்யூன் பதிந்துவிடும் .அது எந்த மொழியாகா இருந்தாலும். இப்படியக என் ஞாபக பெட்டகத்தில் உறைந்துகிடக்கும் அந்த பெயர் தெரியாத ப்டாலில் ஏதாவது ஒன்றை திரும்பக் கேட்க நேரும், சந்தர்பங்களில் எல்லாம் ஒரு விதமான உணர்ச்சி எனக்குள் பொங்கும். அட எனக்கு இந்த பாட்டு தெரியுமே. எனக்குள் ஒரு நீரூற்று பொங்கும் . அந்த இந்தி பாட்டை பாஷை தெரியாவிட்டாலும் என்னால் இந்த ட்யூனை அப்படியே வாயால் தத்தகாரம் போட்டு வானொலியுடன் கூடவே பாட முடியும் இப்படி என் வாழ்க்கையில் நினைவில் பதிந்த அடிக்கடி கேட்ட இந்தி பாடல் ஆஜாரே 1957ல் வெளியான் மதுமதி படப் பாடல் . ஆனால் அந்த காலத்தில் என்ன படம் யார் பாடியது எதுவும் தெரியாது பாட்டும் குரலும் மனதை என்னவோ செய்யும்.). அட இந்த பாட்டில் என்ன இருக்கு.. ? ஆஜாரே என இழுக்கும் போது சோகமாக துவங்குகிறது . அப்படியே படிப்படியாக வேகமக துவங்கி மகிழ்ச்சியான பாடலாக மாறுகிறது இதில் எது நம்மை இழுக்கிறது . எது இந்த பாட்டை அடிக்கடி கேட்கவும் தூண்டுகிறது என யோசிப்பேன் . பிற்பாடு அந்த் ஆஜாரே பாட்டுக்கும் எனக்கும் ஒரு பிணைப்பு. நான் தெருவில் கிரிக்கட் விளியாடிக்கொண்டிருக்கும் போது ரேடியோவில் எப்போதவது கேட்டால் அப்படியே மட்டையை கீழே போட்டுவிட்டோ அல்ல்து தண்ணி குடிக்க வருவதாக் பொய் சொல்லிவிட்டோ வீட்டுக்கு வந்து ரேடியோவை அருகில் ஒரு காதலியை பார்ப்பது போல ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு அந்த் பாட்டைக் கேட்பேன் . அப்படி கேட்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை வார்ர்த்தையில்,விவரிக்க முடியாது. இடைப்ப்ட்ட நாளில் அது போலவே ஆஜாரே எனத்துவங்கும் நூரி பட பாட்டுக்கும் மதுமதி படத்தின் ஆஜாரே ப்ரதேசி பாட்டுக்கும் குழ்ப்பம் வந்து தெளிந்தது . பின் இரண்டுக்கும் ரசிகனாகிவிட்டேன் அக்காலங்கலில் தூர்தர்ஷனில் புதன் கிழ்மை இரவு மற்றும் ஞாயிற்ருகிழ்மை காலை வாரத்தில் இரு நாட்கள் சித்ரஹார் எனும் இந்தி பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். . இக் கால்கட்டங்களில் கலர் டெலிவிஷன்கள் வந்துவிட்டாலும் எங்கள் வீட்டில் அப்போது பிளாக் அணட் ஒயிட் டிவி கூட இல்லை. அக்கம் பக்கம் வீடுகளில் ஓசியில் இந்த நிகழ்ச்சியை பார்க்க நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும் ஒருநாள் சித்ராஹாரை பார்க்கும் போது பல நாட்களாக என் மனதை அடகொண்ட மதுமதியின் பாட்லுக்கு திலீப்குமாரும் வைஜயந்தி மலாவும் டான்ஸ் ஆடுவதை பார்த்தேன் . அதே போல நூரிபட பாடலும் ஒருநாள் பார்க்க நேரிட்டது. ஹீரோ வெளியாகி பட்டி தொட்டி எங்கும் அந்த் பாடல்கள் இதே காலத்தில் ஹிட்ஆனது. அதில் குறிப்பாக் ஒரு புல்லாங்குழல் இசை வரும் . அந்த் ப்டத்தின் நாயகன் புல்லாங்குழல் வைத்துக்கொண்டு அடிக்கடி வாசிப்பான் . அதனால் அந்த் பாட்டின் இசையில் புல்லங்குழ்லுக்கு ஒரு சிறப்பு உண்டு . அக்காலத்தில் அந்த இசையும் பாட்டும் தமிழ் நட்டையே ஆட்டி ப்டைத்தது . டிங் டாங் எனும் அந்த பாட்டின் துவக்த்தில் ஒரு ஆலாபனையுடன் துவங்கும் பெண் குரலுக்கு அனைவருமே மயங்கி வீழ்ந்தனர். என்றே சொல்ல வேண்டும் . அப்போது தான் நான் அதுவரை விரும்பிகெட்டு வந்த ஆஜாரே பாட்லக்ளை பாடியவரும் இந்த டிங் டாங் பாயலை பாடியவரும் ஒருவரே எனவும் அவர் பெயர் லதா மன்கேஷ்கர் எனவும் தெரிய வந்தது . அப்படியாக லதாவின் குரலுக்கு தீவிர ரசினாகிப்போன நான் அவர் பாடிய இந்தி பாட்ல்கள் ஒவ்வொன்றுக்கும் பரம ரசிகனானேன் . அவர் வழியாகத்தான் கிஷோர் முகேஷ் அறிமுகமாகி அவர்களுக்கும் ரசிகனானேன் மற்ற பாடகிகள் கூட குரல் இனிமையை விடவும் லதா மங்கேஷ்கரின் குரலில் என்னவிசேஷம் என்றால் அவர் பாட்லுக்கு குரலின் வழி ஆழமான அனுபவத்துள் அழைத்துச் செல்வார். . இப்போது நம் ஊர் சுசிலாமமா ஜனாகியம்மா உள்ளிட்ட இந்திய பெண் பாடகிகள் , அவரது சகோதரி ஆஷா போன்ஸ்லே அல்லது சாதன சர்க்கம் ஷ்ரேயா கொஷல் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் லதாவின் குரலில் இருக்கும் தனிப்ப்ட்ட விசேஷம் என்ன வெண்ரால் மற்றவர் பாடல்களில் கேட்கும் போது நதிக்குள் பயணிப்பது போன்ற அனுபவம் என்றால் லதாவின் குரலில் ஆழ் கடலில் பய்ணிப்பது போன்ற போன்ற அனுபவம் கிட்டும் . அவர் எந்த் பாடலை பாடினாலும் அந்த படத்தின் கதை இயக்குனர் இசையமைப்பாளர் பாடலைப் பாடும் பாத்திரம் எல்லோரும் அவருக்கு பின்னால் தான் ஒளியவேண்டி வரும். அவர் குரல் எல்லா தகவல் களையும் மறக்கச்செய்து விடும் அதுதான் லதா நிகழ்த்தும் மாயாஜாலம் அவ்ர் பாடும் பாடலின் உணர்ச்சிகள் இலை விட்டு இலை விழும் நீர்த்துளியாக் இருந்தால் கூட போதும் அதி அருவியாக் மாற்றி நம்மி பேரனுபவத்துள் இழுத்துச்செல்வார் . அவர் மாதுரி தீட்ஷித் படங்களுக்கு பாடிய பாட்ல்களை மட்டுமே தனியே கேட்டு பாருங்கள் குறிப்பாக தில் தோ பாகல் கை படத்தில் வரும் அதே பெயரில் துவங்கும் பாடல் பாடும் போது அவருக்கு எழுபது வயதிருக்கும் . ஆனாலும் அந்த் பாடலைக் கேட்கும் போது உங்கள் இதயத்தில் ஐச் க்ரீம் உருகி ஓட வைக்கும் மாயா ஜாலம் அவரல் மட்டுமே நிகழ்த்த முடிந்தது. அவர் எந்த பாடலை பாடினாலும் அந்த் பாடலின் உணர்ச்சிகளை கேட்கும் இதயங்களில் விரவிக்கோண்டு அதே சமயம் நம்மை வேறு ஒரு ப்யணத்துக்குள் இழுத்துச்செல்வார் மவரது குரல் நம்மை உணர்ச்சிகளின் ஆழத்தில் பயணிக்கச்செய்யும் அதே சமயம் அவை மேலோட்டமாக் கவனித்தாலும் மற்ற அனைவரது குரலையும் விட துல்லியமாக இருக்கும் மிகதுல்லியமன குரல் என்ற அளவிலும் கூட இநதியாவின் பெஸ்ட் அவர் தான் . இப்படி துலியம் க்ற்பனை வளம் உணர்ச்சி நிரவல் பாவம் ஸ்ருதி என எப்படி பார்த்தாலும் அவர் இந்ர்தியாவின் நைட்டிங்கேல் என்பதில் வேறு எவருக்கும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. அவர் முதல் இடம் என்றால் அடுத்த 5வது இடத்தில் தான் அவருடைய போட்டியாளராக பலரும் வருவர் ஒரு மகாராஷ்டிர பிராமண குடும்பத்தில் ] 1929 இல் பிறந்த லதா மங்கேஷகரின் அப்பா ,தீனநாத் மங்கேஷ்கர். ஒரு பாரம்பரிய பாடகர் மற்றும் நாடக நடிகர் அவரது அம்மா சுதாமதி குஜராத்திப் பெண், லதா மங்கேஷ்கருக்கு 13 வயதாக இருந்தபோது, அவரது அப்பா இதய நோயால் இறந்து விட அதன் பின் குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் இசை அமைப்பாளரும் திரைப்ப்ட த்யாரிப்பாளருமான விநாயக் தாமோதர் பராமரிப்பில் லதா வளரத்துவங்கினார். இசை பிண்னனி கொண்ட குடும்பம் என்பதல குரல் வளமும் பாடும் திறமையும் ஒருங்கே அவரை வளர்த்து வந்தது.. சினிமாவுக்காக் அவர் பாடிய முதல் பாடல் துரதிர்ஷட வசமாக அந்த ப்டத்திலிருந்து கடைசி நேரத்தில் இல்லமல போனது . அந்த் படம் மராத்தி திரைப்படமான கிடி ஹாசல் 1942). அந்த் படத்தில் சதாசிவ்ராவ் நெவ்ரேக்கரால் இசையமைக்கப்பட்ட "நாச்சு யா கதே, கேலு சாரி மணி ஹவுஸ் பாரி" எனும் பாடலைத்தான் அவர் பாடியிருந்தார். பாடலோடு சேர்ந்து ஒரு சில படங்களில் அவர் நடிக்கவும் செய்தார் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தாலும் அவருக்கு நடிப்பதில் துளியும் ஆர்வமில்லை பெரிய பாடகி ஆகவேண்டும் என்ற எண்னம் கூட இல்லை . இன்னும் சொல்லப்போனால் அவருக்கு இயல்பில் தான் மிகபெரிய புகழடைவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து பாடக் கிடைக்கும் வாயப்புகளை பயன்படுத்தி மெல்ல திரையுலகில் முன்னேறிக்கொண்டிருந்தார் . இந்த சூழலில்தான் அவருக்கு ஒரு கனவு அடிக்கடி வந்து தொந்தரவு செய்தது. அது ஒரு , கடலோரத்தில் உள்ள கருங்கற்களால் ஆன கோவில். அந்த கோவிலில் அவர் மட்டும் தனியே இருப்பதக உணர்கிறார். சுற்றிலும் கடல் அலைகளின் சீற்றம் . அவள் தனியாக இருப்பதைக் காண்கிறாள். . அந்த கோவிலில் என்ன சாமி என்ன கடவுள் என்றும் தெரியவில்லை . அதைப் பரக்கும் ஆவலுடன் முன்னேறுகிறார் ஆனால் அதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை . இறுதியில் கோயிலின் பின்பக்கம் ஒரு க்தவு கதவை திறக்கிறார். அங்கு கல் படிகட்டுகள் கீழிறங்க அதில் கால் வைத்து இறங்க அதில் மோதும் பிரம்மாணட கடல் அலைக்குள் அவர் இறங்குகிறார் கடலின் ஆழத்தில் செல்கிறார் . சட்டென் கனவு கலைகிறது பாதியில் எழுந்துவிடுகிறர் இப்படி ஒரு கனவு அவருக்கு அடிக்கடி வர தன் தாயாரிடம் இது பற்றி கேட்க்கும் போது இன்னும் கொஞ்ச நாளில் நீ மிகப் பெரிய புகழை அடையப் போகிறாய் என்பதாக அவர் சொன்னதகாவும் அப்படி சொன்னபோது தான் முதலில் நம்பவில்லை என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார் 1949 ஆம் ஆண்டு வெளியான , மஹால் திரைப்படத்தின் 'ஆயேகா ஆனே வாலா' பாடல் தான் அவருக்கு முதல் ஹிட் . தொடர்ந்து அவருக்கு மேலும் சில பாடல்கள் ஹிட் ஆனாலும் அவர் மீது சிலர் குற்றம் குறை சொல்வதும் தொடர்ந்தது .. அக்காலத்தில் உருதுவில் எழுதப்ட்ட் வரிகலைத்தான் பாடகர்கள் இந்தி படங்களில் பாட வேண்டியிருந்தது. ஆனால் லதாவுக்கோ இந்தி தெரியாது . இதனால் வார்த்தைகளில் பல சமயம் தடுமாற்றம் வரத் துவங்கியது . அது அவருக்கு பெரிய பிரச்னையாகிப் போனது. ஒருமுறை அன்றைய சூப்பர் ஸ்டாரான திலிப்குமாரே கூட லதாவின் உருது உச்சரிப்பு சரியில்லை என் பகிரங்க மாக குற்ரம் சாட்ட பின் இதற்காக் உருது மொழியை பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டு மீண்டும் பாடத்துவங்கினார் அதன்பின் திலீப் குமாரே வியக்கும் பாட்ல்களை பாடினார் என்பதுவே வரலறு அன்று துவங்கிய அவரது பயணம் இந்தியாவின் முன்னணி இசையமைபாளர்கள் அனைவரும் அவர் காரின் வருகைக்காக ஸ்டூடியோ வாசலில் நிற்க வைக்கும் அளவுக்கு முன்னேறியது. இக்கால கட்டங்கலில் மள மளவென புகழின் உச்சியில் ஏறினார். நவ்ஷத் துவங்கி ஏச்டி பர்மண் ல்லஷ்மிகாந்த் பியாரிலால் . ஆர் டி பரமன் இளையராஜா வரை அனைவரது அனபுக்கும் பாத்திரமானார் . நம் ஊர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் அவரது குரலும் லதா அவரது நடிப்புக்கும் பரஸ்பரம் தீவிர ரசிகர்களாக இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே சத்யா பட்த்தில் இளையாராஜாவுகாக வளையோசை கலகலவென் அவ்ர் குரலில் கலகத்த இளைஞர்களின் இதயங்கள் இன்றைய டூ கே கிட்ஸ் வரைக்கும் ஈர்த்துக்கொண்டுத்தான் இருக்கிறது ஒரு பாடகி எனபதைத் தாண்டி இந்தியாவின் கலை அடையாளமாக பல நாடுகளில் அவருக்கு கிடைத்த கவுரவம் ஒரு நடிகருக்கும் கூட கிடைக்காதது . . எந்த திரை நட்சத்திரத்துக்கும் சளைக்காத புகழ் உச்சியைத்தொட்ட லதாவுக்கு , தாதா சாகேப் பால்கே விருது (1989) உட்பட எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளார் மற்றும் 2001 இல் இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா உட்பட பல அசாதாரண அங்கீகாரத்தைப் பெற்றார். இத தொடர்ச்சியக அவர்து உயரங்களை நோக்கிய பயணம் கடந்த் பிர்வரி ஆறாம் தேதி வானுலகம் செல்வதுடன் ஒரு முடிவுக்கும் வந்தது நான் அவர் இறந்த செய்தியை கடந்த பிப்ரவரி 6 ம் தேதி கேட்கும் தருணத்தில் பொன்னிற வெளிச்த்தில் சூர்யன் மயங்கும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் கேட்ட ஆஜாரே பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்தது. நன்றி: பேசும் புதிய சக்தி மார்ச் 2022 இதழ்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...